மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 2 July, 2021 10:23 PM IST
Credit : India TV

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகளுடன் ஊரடங்கை ஜூலை 12 வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கொடூரக் கொரோனா (Cruel corona)

நாட்டின் பல மாநிலங்களில் கோரத் தாண்டவம் ஆடியக் கொரோனா வைரஸின் 2-வது அலை, தமிழகத்தையும் உலுக்கியது.நாள்தோறும் திக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு, நூற்றுக்கணக்கானோர் பலி என மாநிலமே மரண ஓலமாக மாறியது.

முதியவர்கள், இளைஞர்கள் என எந்த வித்தியாசமும் இன்றி கண்ணில் கண்டவர்களையெல்லாம், ஈவு இரக்கமின்றி, தன் கொடூரக் கரங்களால் காவு வாங்கியது கொரோனா.

முடிவுக்கு வரும் ஊரடங்கு (The curfew that ends)

இதையடுத்து மாநிலத்தில் கொரோனாப் பரவலைத் தடுக்க ஏதுவாக, கடந்த மாதம் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. நோய் பரவல் குறையத் துவங்கியதைத் தொடர்ந்து, தமிழக அரசு படிப்படியாகத் தளர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, வரும், 5ம் தேதி காலை, 6:00 மணிக்கு நிறைவடைகிறது.

3 வகை மாவட்டங்கள் (3 types of districts)

  • நோய் பரவலின் தன்மைக்கேற்ப, மாவட்டங்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவுக்கும், ஒவ்வொரு விதமான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • முதல் வகையில் இடம் பெற்றுள்ள 11 மாவட்டங்களில், பேருந்துப் போக்குவரத்து இன்னமும் அனுமதிக்கப்படவில்லை.

  • மற்ற மாவட்டங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளது. தற்போது, நோய் பரவல் குறைந்தாலும், நோய் பாதிப்புக்கு ஆளாகுவோர் எண்ணிக்கைத் தொடர்கிறது.

ஆலோசனை (Advice)

இதையடுத்து ஊரடங்கை நீட்டிப்பதா? அல்லது புதிய தளர்வுகளை அறிவிப்பதா? என்பது பற்றியும், நோயை முழுமையாக கட்டுப்படுத்தவும், மூன்றாவது அலையை எதிர்கொள்ளவும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தலைமைச் செயலகத்தில், இன்று மருத்துவ நிபுணர்கள் குழு மற்றும் அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

முதலமைச்சர் உத்தரவு (Order of the Chief Minister)

இந்தக் கூட்டத்திற்கு பிறகு, தமிழகம் முழுதும் ஒரே மாதிரியான தளர்வுகளுடன் ஜூலை 12 வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள் அமல்.

இ- பதிவு ரத்து (Cancel e-Registration)

மாவட்டங்களுக்கிடையேயான இ- பதிவு முறை ரத்து.

அனுமதி (Permission)

  • தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்திற்கு அனுமதி.

  • உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை உணவருந்த அனுமதி.

  • அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறக்க அனுமதி.

  • உடற்பயிற்சிக் கூடங்கள், விளையாட்டு கூடங்கள் திறக்க அனுமதி.

  • மதுக்கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்க அனுமதி.

  • ஐ.டி., நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட அனுமதி.

  • 50 சதவீதம் பேருடன் பொழுதுபோக்கு பூங்கா செயல்பட அனுமதி.

  • தமிழம் முழுதும் 50 சதவீத இருக்கைகளுடன் அரசு, தனியார் பேருந்துகள் இயக்க அனுமதி.

அனுமதி கிடையாது

  • தியேட்டர்கள், நீச்சல் குளங்கள் செயல்பட அனுமதி இல்லை.

  • பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி கிடையாது.

  • வணிக வளாகங்களில் உள்ள தியேட்டர்கள் இயங்க அனுமதி இல்லை.

  • சமுதாயம் , அரசியல் பொது கூட்டங்களுக்கு அனுமதி இல்லை.

  • தமிழகம் முழுதும் கோயில் திருவிழாக்கள், குடமுழுக்கு நடத்த அனுமதியில்லை

  • இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசக் கொரோனாத் தடுப்பூசி - தமிழக அரசு!

கொரோனா தடுப்பூசி விநியோகிக்க டிரோன் பயன்பாடு! ஆய்வு செய்ய அரசு அனுமதி!

தமிழகத்திற்கு 4 இலட்சம் கொரோனா தடுப்பூசி வருகை! சுகாதாரத் துறைத் தகவல்!

English Summary: Curfew extended till July 12 - Similar relaxations across Tamil Nadu!
Published on: 02 July 2021, 09:43 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now