மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 31 August, 2020 7:29 AM IST
Credit :Reddiff.com

தமிழகத்தில் வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் 4-ம் கட்ட ஊரடங்கை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்தியா முழுவதும் வரும் செப்டம்பர் மாதம் வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை (Unlock 4) நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் படி, மாநிலத்துக்கு உள்ளேயும், மாநிலங்களுக்கு இடையையும் போக்குவரத்துக்குத் தடை இல்லை என்றும், நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஊரடங்கு செப்டம்பர் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும், வரும் செப்டம்பர் 7-ந் தேதி முதல் மெட்ரோ ரெயில் சேவை படிப்படியாகத் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்திலும் கூடுதல் தளர்வுகளுடன் வரும் செப்டம்பர் 30 வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதன்படி,

ஞாயிற்றுக் கிழமைகளில் அமல்படுத்தப்பட்டு வந்த முழு ஊரடங்கு, செப்டம்பர் மாதம் முதல் ரத்து செய்யப்படுகிறது.

மாவட்டங்களுக்கு இடையே E-PASS ரத்து

தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே E-PASS இன்றி பொதுமக்கள் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிடிநநாட்டிற்குள் வருவதற்கு E-PASS நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைப்பேசி/ அலைபேசி எண்ணுடன் E-PASS விண்ணப்பித்த அனைவருக்கும் (Auto generated) முறையில் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் E-PASS வழங்கப்படும்.

வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி

அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கென நிலையான வழிகாட்டு நடைமுறைகள் அரசால் வெளியிடப்படும். இதன் மூலம் ஒரு நாளைக்குத் தரிசனத்துக்கு வரும் அதிகபட்ச பக்தர்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்வதுடன், வழிபாட்டு தலங்களில் உள்ளேயும் கர்ப்பகிரகம் போன்ற புனித இடத்திற்கும் ஒரே நேரத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவர். வழிபாட்டுத் தலங்களுக்குப் பொதுமக்கள் தரிசனம் இரவு 8.00 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படும்.

போக்குவரத்து சேவைக்கு அனுமதி

மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து, சென்னையில் பெருநகர பேருந்து போக்குவரத்து சேவை 1.9.2020 முதல், நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் (Standard Operating Procedure) செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

பெருநகர சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து 7.9.2020 முதல் இதற்கென வகுக்கப்படும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் (Standard Operating Procedure) செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

Credit :LLB

வணிக வளாகங்களுக்கு அனுமதி

வணிக வளாகங்கள் (Shopping Malls), அனைத்து ஷோரூம்கள் (Show Rooms) மற்றும் பெரிய கடைகள் (Big format stores) 100 சதவிகித பணியாளர்களுடன், மத்திய அரசின் குளிர்சாதன வசதி குறித்த வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றியும், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை (Standard Operating Procedure) பின்பற்றியும் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

எனினும், வணிக வளாகங்களில் (Shopping Malls) உள்ள திரையரங்குகள் இயக்க தடை தொடரும்.

அனைத்து கடைகளும் இயங்க அனுமதி

சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் அனைத்து கடைகளும் இரவு 8.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும். அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, உணவகங்கள் மற்றும் தேநீர்க் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. பார்சல் சேவை இரவு 9 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.

100% பணியாளர்களுடன் நிறுவனங்கள் இயங்க அனுமதி

சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 100 சதவிகித பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தவிர்க்க இயலாத பணிகள் மேற்கொள்ளும் பணியாளர்களைத் தவிர பிற பணியாளர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய ஊக்குவிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், கேளிக்கை விடுதிகள் (Recreation clubs) மற்றும் பிற விருந்தோம்பல் சேவைகள் (Clubs) நிலையான வழிகாட்டு நடைமுறைகளை (Standard Operating Procedure) பின்பற்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது.

தற்போது 50 சதவிகித பணியாளர்களுடன் இயங்கும் அரசு அலுவலகங்கள், 1.9.2020 முதல் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கும். 

சுற்றுலா மற்றும் சினிமா 

நீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து மலை வாசஸ்தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்லுவதை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சித் தலைவர் அனுமதியுடன் E-Pass பெற்று செல்ல அனுமதிக்கப்படுவர்.

திரைப்படத் தொழிலுக்கான படப்பிடிப்புகளுக்கு உரிய வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு, ஒரே சமயத்தில் 75 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. படப்பிடிப்பின் போது பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.

Credit :Ndtv.com

ரயில்களுக்குத் தடை நீட்டிப்பு

மாநிலங்களுக்கு இடையேயான இரயில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்ட தடங்களில் மட்டும் செயல்படும். எனினும், மாநிலத்திற்குள் பயணியர் ரயில்கள் செயல்பட 15.9.2020 வரை அனுமதியில்லை. 15.9.2020க்குப் பிறகு, தமிழ்நாட்டிற்குள் பயணியர் இரயில்கள் அனுமதிப்பது பற்றி, சூழ்நிலைக்கேற்ப முடிவு எடுக்கப்படும்.

விமானச் சேவை அதிகரிப்பு

தற்போது நாள்தோறும் சென்னை விமான நிலையத்தில் வெளி மாநிலங்களில் இருந்து 25 விமானங்கள் தரையிறங்க அனுமதித்துள்ள நிலையில், இனி 50 விமானங்கள் வரை தரையிறங்க அனுமதிக்கப்படுகிறது. இது தவிர கோயம்புத்தூர்,
திருச்சிராப்பள்ளி, மதுரை, தூத்துக்குடி, சேலம் ஆகிய விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள நிலை தொடரும்.

கட்டுப்பாடு தொடரும்

  • மாநிலம் முழுவதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144ன் கீழ் பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்ற தடை உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும்.

  • தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்த விதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.


மேலும் படிக்க...

கிசான் கடனுக்கான வட்டி தள்ளுபடியை பெற இன்றைக்குள் உங்கள் தவணை திருப்பி செலுத்த வேண்டும்!!

Amazon pay-யில் LPG சிலிண்டர் புக் செய்தால் ரூ.50 தள்ளுபடி! ஆக.31வரை மட்டுமே!!

English Summary: Curfew extension with additional relaxations: What are the new relaxations !! Details inside!
Published on: 31 August 2020, 07:23 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now