News

Thursday, 10 June 2021 06:47 PM , by: Daisy Rose Mary

தமிழகத்தில் ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க உயர் அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளதாகவும், கொரோனா தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மே 10-ந் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வராததையடுத்து கடந்த மே 24-ந் தேதி முதல் ஜூன் 7ம் தேதி வரையில் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதைதொடர்ந்து தமிழகத்தில் 36 ஆயிரம் என்ற தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்து 19 ஆயிரம் என்ற எண்ணிக்கைக்கு வந்தது. அதைத் தொடர்ந்து 7-ந் தேதியில் இருந்து சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

குறையும் கொரோனா பாதிப்பு

நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 321 ஆக குறைந்திருந்தது. கொரோனா பரவல் படிப்படியாக குறைந்தாலும், உயிரிழப்புகளில் அந்த சூழ்நிலை எழவில்லை.

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஆலோசனை

இந்த நிலையில், மேலும் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுவது தொடர்பாகவும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், வருவாய் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

ஊரடங்கு நீட்டிக்க பரிந்துரை

இந்த கூட்டத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க உயர் அதிகாரிகள் பரிந்துரைத்ததாக தகவல் வெளியானது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளைக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க உயர் அதிகாரிகள் பரிந்துரைத்ததால் தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் நேரக்கட்டுப்பாட்டுடன் டோக்கன் முறையில் டாஸ்மாக்கில் மது விற்பனை செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க...

N95 மாஸ்க் ரூ.22, பிபிஇ கிட் உடை - ரூ.273 மட்டுமே மற்றும் பல மருத்துவ பொருட்களுக்கு தமிழக அரசு விலை நிர்ணயம்!

கொரோனா பரவல் குறைந்துவிடுட்டாலும், அந்த நிலைமை இறப்பு எண்ணிக்கைகளில் எழவில்லை

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)