இந்த ஆண்டு பொதுத் தேர்வை எதிர்நோக்கி உள்ள மாணவர்களுக்கு, பாடத்திட்டங்கள் குறைக்கப்படுவதாகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமா, சுமார் 20 மாதங்களுக்குப் பிறகுத் தமிழகத்தில் கடந்த செப்டம்பர்மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டன. எனினும், கொரோனா மூன்றாவது அலை காரணமாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு மீண்டும் ஆன்-லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.
அதே நேரத்தில் கொரோனா தாக்கம் குறைந்ததையடுத்து, பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஒரிரு மாதங்களில் ஆண்டு பொதுத் தேர்வை எதிர்நோக்கியுள்ள மாணவர்களுக்கு மகிழ்ச்சிகரமான தகவலை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, கடந்த இரண்டாண்டுகளாக பள்ளி வகுப்புக்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வந்தன. ஆண்டு இறுதி தேர்வுக்கு தற்போது குறைவான காலமே இருப்பதால் பள்ளிப் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தேதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. அவர்கள் தேர்வை அச்சமின்றி எதிர்கொள்ளும் வகையில் திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
மார்ச் மாத இறுதிக்குள் பாடத்திட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டு ஏப்ரல் மாதத்தில் திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டப் பிறகு தான் பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க...
ரூ.70000 சம்பளத்தில் வங்கி வேலை- கல்வித்தகுதி பட்டப்படிப்பு!
Fees கேட்டு நிர்பந்திக்கக்கூடாது- தனியார் பள்ளிகளுக்குக் கடும் எச்சரிக்கை!