தமிழகத்தை வரும் 25-ம் தேதி நிவர் புயல் தாக்குகிறது, இதனால் அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே கரைய கடக்க்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தை தாக்கும் நிவர் புயல் - Cyclone NIVAR
நேற்று தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைக்கொண்டுள்ளது, இது அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதனை அடுத்த 24 மணி நேரத்தில் புயலாகவும் (நிவர் -Nivar) வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 25ம் தேதி பிற்பகலில் காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் (Karaikal and Mahabalipuram) இடையே கரையை கடக்க்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக, வரும் 23-ம் தேதி நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்கில் இடியுடன் கூடிய கன மழையும்
அதிகனமழை எச்சரிக்கை
வரும் 24-ம் தேதி புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் காரைக்கால், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், பெரம்பலூர் பகுதிகளில் மிக அதிக கனமழை இருக்கும். அதேபோல, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், புதுச்சேரி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை முதல் மிககனமழை இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வரும் 25ம் தேதி நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகன மழையும்
திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர், ஈரோடு, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்ப்பட்டு, திருவள்ளூர், புதுக்கோட்டை மற்றும் சென்னையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழையும் ஏனைய வட மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புயல் மற்றும் கனமழை காரணமாக நவம்பர் 25ம் தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட் (Red alert for Tamilnadu) எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
வங்கக் கடல் பகுதிகள்
இன்று முதல் வரும் 25ம் தேதி வரை தென்மேன்கு மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
அரபிக்கடல் பகுதிகள்
இன்று மென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் புயல் காற்று மணிக்கு 70 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
நாளை மென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் புயல் காற்று மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
இதானல் மீனவரகள் யாரும் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க...
விவசாயிகளுக்கு முக்கிய செய்தி : கனமழை எச்சரிக்கை, உடனே பயிர் காப்பீடு செய்யுங்கள் - வேளாண்மை முதன்மைச் செயலர்!!
70 எத்தனால் திட்டங்களுக்கு ரூ. 3,600 கோடி கடன் - மத்திய அரசு!!
தரமான விதை உற்பத்திக்கு அதிக விலை: உளுந்து விதைப்பண்ணை அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு!!