தென்மேற்கு வங்கக் கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இந்த புயல் இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெற்று நாளை பிற்பகல் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையை கடக்கும் போது புயல் மணிக்கு 100 கி.மீ முதல் 110 கி.மீ வேகத்திலும் இடையிடையே 120 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிவர் புயல் காரணமாக தமிழக கடலோரப்பகுதிகளில் படிப்படியாக மழை தீவிரம் அடையும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தீவிரம் அடையும் மழை
சென்னையில் பல்வேறு பகுதிகளில் இரவு முதல் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. தி.நகர், நந்தனம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், தேனாம்பேட்டை, கொட்டிவாக்கம், திருவான்மியூர், அடையார், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதேபோல் புதுவை, காரைக்கால், கடலூர் பகுதிகளில் பரவலாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
மிக கனமழைக்கு வாய்ப்பு
இந்நிலையில், (Cyclone Nivar) புயல் காரணமாக இன்று நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, அரியலூர், காரைக்கால், பகுதிகளில் மிக கனமழை பெய்யும். இதேபோல் கடலூர், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், விழுப்புரம், சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது
நாளை நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மிக உச்சகட்ட மழை பெய்யும். இதேபோல் திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மறறும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
பேருந்துகள் நிறுத்தம்
புயல் காரணமாக இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை புதுகை, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர்,விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து சேவையை (Transportation service) நிறுத்தி வைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்க..
நிவர் புயல் நாளை கரையைக் கடப்பதால் மக்கள் யாரும் வெளிவர வேண்டாம்! முதல்வர் அறிவிப்பு!
Nivar cyclone : புயல் காற்றில் இருந்து தென்னை மரங்களை பாதுகாப்பது எப்படி?
புயல் எச்சரிக்கை : பயிர் இழப்பை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் - வேளாண் துறை!!