News

Sunday, 13 November 2022 07:17 PM , by: T. Vigneshwaran

LPG Price

குஜராத் சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்றால், சமையல் எரிவாயு உருளைகள் 500 ரூபாய்க்கு வழங்கப்படும் என்று காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 182 சட்டப்பேரவை இடங்களை கொண்ட குஜராத் சட்டமன்றத்துக்கு வரும் 1ம் தேதி முதல்கட்டமும், 5ம் தேதி 2-ம் கட்டமும் நடைபெற்று, 8ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

இந்நிலையில், குஜராத் மாநிலத்துக்கான தேர்தல் அறிக்கையை, ராஜஸ்தான் மாநில முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான அசோக் கெலாட் வெளியிட்டார்.

அதில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்றும், மாநிலத்தில் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும், 300 யூனிட் மின்சாரம், 500 ரூபாய்க்கு சிலிண்டர் என்ற வாக்குறுதிகளையும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் தர உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 3 லட்சம் ரூபாய் வரையிலான விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.

மேலும் படிக்க:

விவசாயிகள்: சம்பா நெல் பயிர் காப்பீடு எடுத்துட்டீங்களா

தமிழக அரசு: ரேஷன் கார்டுதாரர்களுக்கு பெரிய அறிவிப்பு

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)