சென்னையில் இன்று முதல் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையில் 91 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. வீடு மற்றும் கடைகளில் சமையலுக்குப் பயன்படுத்தப்பட்டுவரும் எரிவாயு சிலிண்டர் விலை அவ்வப்போது மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது, சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் 2 ஆயிரத்து 131 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனம் இன்று முதல் குறைத்துள்ளது. அதன்படி, ஒரு சிலிண்டர் விலை 91 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
இதனால், சென்னையில் இன்று முதல் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 2 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சிலிண்டர் விலை சற்று குறைந்துள்ளதால் வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் பயனாளர்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.
மாற்றம் இல்லை
அதேநேரத்தில், வீடுகளில் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றமின்றி 915 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஏற்கனவே சிலிண்டருக்கு மத்திய அரசு வழங்கும் மானியமும் முறையாக வந்துசேர்வதில்லை என்பதால், மக்கள் மோடி அரசு மீது அதிருப்தியில் இருந்த இல்லத்தரசிகளுக்கு, இந்த அறிவிப்பு மேலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க...