இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 28 May, 2023 12:19 PM IST
DA Hike- big good news for Central government employees within week

ஒரே வாரத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி வர உள்ளது. ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு குறித்த ஆலோசனை கூட்டம் வருகிற மே-31 ஆம் தேதி நடைப்பெற உள்ளது. அக்கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களின் 7-வது ஊதியக் குழுவின் கீழ் அகவிலைப்படி ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே உயர்த்தப்படுகிறது. இது முதல் முறையாக ஜனவரியிலும், இரண்டாவது முறையாக ஜூலையிலும் உயர்த்தப்படுவது வழக்கம். ஆனால், இந்த அறிவிப்பு ஒவ்வொரு ஆண்டும் தாமதமாக வெளியிடப்படுகிறது. ஜனவரி மாத அகவிலைப்படி, கடந்த மார்ச் மாதத்தில் தான் அறிவிக்கப்பட்டது.

சமீபத்தில் மார்ச் மாதம் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 4% உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. இது ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளது. மீண்டும் அகவிலைப்படியை உயர்த்த (DA Hike) மத்திய அரசு ஆலோசித்து வரும் நிலையில், அகவிலைப்படி உயர்வு தொடர்பாக மே 31-ம் தேதி மாலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

50 சதவீதத்தை எட்டும் அகவிலைப்படி:

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2024- ஆம் ஆண்டு சம்பளத்தில் பெரும் உயர்வு கிடைக்கும். ஆதாரங்களின்படி அகவிலைப்படி 50 சதவீதத்தை தாண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஜூலையில் DA 4 சதவீதம் அதிகரிக்கப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மொத்த DA Hike 46 சதவீதமாக இருக்கும், மேலும் 2024 ஜனவரியில் DA மேலும் 4% அதிகரிக்கப்பட்டால், ஜனவரியில் மொத்த DA 50% ஆக இருக்கும்.

50 சதவீதமாக உயரும் பட்சத்தில் அரசின் விதிகளின் படி, மொத்த அகவிலைப்படி பூஜ்ஜியமாக (0) குறைக்கப்படும். 50 சதவீதமாக அகவிலைப்படி இருந்தால் (DA Hike), அது பூஜ்ஜியமாக்கப்பட்டு, ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன் அகவிலைப்படி பணம் சேர்க்கப்படும் என்ற விதி அமலாகும். இதற்குப் பிறகு அகவிலைப்படி பூஜ்ஜியத்தில் இருந்து மீண்டும் தொடங்கும்.

மாநில அரசு அகவிலைப்படி:

மத்திய அரசிற்கு இணையாக இல்லையென்றாலும், மாநில அரசும் தொடர்ச்சியாக அகவிலைப்படியினை தங்களது அரசு ஊழியர்களுக்கு அதிகரித்து வழங்கி வருகிறது. தமிழக அரசு அகவிலைப்படியினை உயர்த்தி ஆணை வெளியிட்ட நிலையில், ஏழாவது ஊதியக் குழுவின்படி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 8 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல் அறிவித்துள்ளார்.

எப்படியும் மே-31 ஆம் தேதி DA hike எத்தனை சதவீதம் என்பது தெரிந்துவிடும் என்பதால், மத்திய அரசு ஊழியர்கள் இப்போதை உற்சாக மனநிலையில் உள்ளனர்.

மேலும் காண்க:

கூலித்தொழிலாளியின் வங்கி கணக்கில் ஒரே இரவில் 100 கோடி- நடந்தது என்ன?

English Summary: DA Hike- big good news for Central government employees within week
Published on: 28 May 2023, 12:19 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now