News

Wednesday, 17 August 2022 10:43 PM , by: Elavarse Sivakumar

அனைத்து அரசு ஊழியர்களுக்கும், ஜூலை ஒன்றாம் தேதி முதலே அகவிலைப்படி உயர்வு கணக்கிட்டு வழங்கப்படும் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சுதந்திர தின உரையில், அகவிலைப்படி உயர்வை அறிவித்திருந்தார். கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும் அரசு ஊழியர்கள் இந்த அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

34% மாக உயர்வு

தமிழக முதலமைச்சர் 75-வது சுதந்திர தின உரையில், மத்திய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிடும் கோரிக்கையை ஏற்று, கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும் மாநில அரசு ஊழியர்கள்/ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 01.07.2022 முதல் அகவிலைப்படியை 31 விழுக்காட்டிலிருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

ஜூலை 1 முதல்

இந்த அறிவிப்பின்படி தலைமைச் செயலளாளர் முதல் கடைநிலை ஊழியர் வரை அனைத்து தமிழ்நாடு அரசின் ஊழியர்களுக்கும் இந்த அகவிலைப்படி 01.07.2022 முதலே உயர்த்தி வழங்கப்படும்.

அரசாணை

இதற்கான அரசாணை விரைவில் தனித்தனியே வெளியிடப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜூலை 1ம் தேதி முதலே அகவிலைப்படி உயர்வு கணக்கிடப்பட்டு விரைவில் வழங்கப்படும் என்பது தெளிவாகியுள்ளது.

மேலும் படிக்க...

தேசத்தின் சிறந்த முதல்வர்கள் பட்டியல் - 3ம் இடத்தில் மு.க.ஸ்டாலின்!

ஆதரவற்றப் பெண்களின் திருமணத்துக்கு ரூ.50,000 நிதியுதவி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)