சிறந்த திரைப்படத்திற்கான தாதாசாஹேப் பால்கே விருதை அல்லு அர்ஜூனின் புஷ்பா திரைப்படம் தட்டிச் சென்றுள்ளது. தெலுங்கு முன்னணி ஹீரோ அல்லு அர்ஜூன், நடிகை ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர்.
சூப்பர் ஹிட் திரைப்படம்
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா நடிப்பில் வெளியான கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளிவந்தத் திரைப்படம் புஷ்பா. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி இந்தத் திரைப்படம் எக்கச்சக்க வசூலை வாரிக் குவித்தது.
திரைக்கு வந்து பல நாட்கள் ஆனபோதிலும், இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் யாவும் 'ஊ சொல்றியா மாமா, சாமி சாமி, ஸ்ரீவல்லி' போன்ற பாடல்கள் ரசிகர்கள் மனதைக் கொள்ளை கொண்டு நீங்கா இடம் பிடித்தன.
இந்த பாடல்களுக்கு சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நடனமாடி அதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதனை பலரும் சேலஞ்சாக எடுத்துக்கொண்டு நடனமாடி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது தாதாசாஹேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருதுகள் 2022 இல் இந்த ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான விருதை புஷ்பா திரைப்படம் வென்றுள்ளது.
இது தொடர்பாக தாதாசாஹேப் பால்கே சர்வதேச திரைப்படவிழா ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள அறிவிப்பில் கூறியதாவது:-
தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருதுகள் 2022 இல், ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றதற்காக 'புஷ்பா மற்றும் தி ரைஸ்' படத்திற்கு வாழ்த்துகள். படக்குழுவின் கடின உழைப்பும் விடாமுயற்சியும் பலனளித்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து புஷ்பா படக்குழுவினர் தற்போது மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
மேலும் படிக்க...
புழக்கத்தில் போலித் தங்கம்- தரத்தைப் பரிசோதிக்க எளிய வழிகள்!
70 வயதிலும் ஆசை வரும்- டேட்டிங்கிற்கு ஆசைப்பட்டு, ரூ.60 லட்சத்தை இழந்த முதியவர்!