அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. குறிப்பாக 22 மாவட்டங்களில் 50க்கும் கீழ் தினசரி கொரோனா பாதிப்பு இறங்கியுள்ளது.
கொடூரக் கொரோனா (Cruel corona)
உலக நாடுகளை உலுக்கியக் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை, இந்தியாவிலும் கோரத் தாண்டவம் ஆடியது. குறிப்பாகத் தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாகவே இருந்தது. ஆரம்பத்தில் நாள் தோறும் 30 ஆயிரத்திற்கும் மேல் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்தது.
அதிரடி நடவடிக்கை (Action)
இதையடுத்து, இரவு நேர ஊரடங்கு, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொண்டது.
பாதிப்பு குறைந்தது (The impact is minimal)
இதன் பலனாக கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. தற்போதைய தினசரி பாதிப்பு 2,500ராக உள்ளது. தமிழகத்தில் 31,819 பேர் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து ஒரே நாளில் 3,104 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
3 இலக்கம் (3 digit)
அனைத்து மாவட்டங்களிலும் தினசரி பாதிப்பு 300க்கும் குறைவாக உள்ளது. அதிலும் 8 மாவட்டங்களில் மட்டுமே 3 இலக்க எண்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.
50க்கும் கீழ் (Under 50)
22 மாவட்டங்களில் 50க்கும் குறைவானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோயம்புத்தூரில் 290பேருக்கும், ஈரோடு மாவட்டத்தில் 193பேருக்கும், தஞ்சாவூரில் 191பேருக்கும், பெரம்பலூரில் 12பேருக்கும், திருநெல்வேலியில் 16பேருக்கும், தென்காசியில் 17பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் 165 பேருக்கும், திருச்சியில் 103 மற்றும் மதுரையில் 33பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயிரிழப்பு இல்லை (No casualties)
சென்னையில் 6 பேரும், தஞ்சாவூரில் 4பேரும், கன்னியாகுமரியில் 4 பேரும், திருவள்ளூரில் 3பேரும்,திருச்சியில்2 பேரும் கொரோனாவால் உயிரிழந்தனர். தமிழகத்தின் 20 மாவட்டங்களில் உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை.
3,929 பேர்
தொற்று குறைந்து வருவதால் கறுப்பு பூஞ்சை பாதிப்பும் குறைந்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் 3,929 பேர் கறுப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொற்று பாதிப்பு ஏற்பட்டவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் குணமடைந்ததாகவும், தொற்று காரணமாக 122 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
ஈரோட்டில் சூறாவளிக்காற்று மழையால் வாழைகள் சாய்ந்தன: இழப்பீடு வழங்க கோரிக்கை!
6 மாதத்திற்கு தொடர் லாபம் பெற மணத்தக்காளிக்கீரை