தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்தியாவில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 1,64,511-ஐ கடந்துள்ளது. இது நாட்டின் மொத்த பாதிப்பில் 1.48 சதவீதம்.
6 மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பு
மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகா, தமிழகம் மற்றும் குஜராத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புதிதாக தொற்று ஏற்பட்டவர்களில் 86.37 சதவீதம் பேர் 6 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
கடந்த 24 மணி நேரத்தில் 16,752 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 8,623 பேருக்கும், கேரளாவில் 3,792 பேருக்கும், பஞ்சாப்பில் 593 பேருக்கும் புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களுடன், அமைச்சரவை செயலாளர் நேற்று உயர்நிலை ஆலோசனை கூட்டம் நடத்தினார். கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவரமாக பின்பற்றும்படி அவர் ஆலோசனை கூறினார். தொற்று அதிகரிப்புக்கான காரணத்தை கண்டறிய, சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு உயர்நிலைக் குழுக்களையும் மத்திய அரசு அனுப்பியுள்ளது.
கொரோனா தொற்று புள்ளி விபரம்
கொரோனா தடுப்பூசி திட்டம் மூலம், மொத்தம் 1,43,01,266 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
இதுவரை, மொத்தம் 1.07 கோடி பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். 11,718 நோயாளிகள் கடந்த 24 மணி நேரத்தில் குணடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 113 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
19 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணி நேரத்தில், எந்த கொரோனா உயிரிழப்பும் ஏற்படவில்லை.
மேலும் படிக்க...
தமிழைக் கற்கும் முயற்சியில் Fail ஆனேன் - பிரதமர் மோடி!
விவசாயம் சார்ந்த செயற்கைக்கோளுடன் PSLV C-51 ராக்கெட் - விண்ணில் ஏவப்பட்டது!
வரும் 3ம் தேதி வரை வாட்டி வதைக்கப் போகிறது வெயில்!
பால் பண்ணையில் கூடுதல் லாபம் பெற வேண்டுமா?
பழங்குடியின விவசாயிகளுக்கு விதை உற்பத்தி பயிற்சி- TNAU ஏற்பாடு!