News

Sunday, 04 September 2022 01:48 PM , by: R. Balakrishnan

Crops Damage

மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் நீர் முழுவதுமாக திறக்கப்பட்டதால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த தண்ணீரானது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று பழையாரில் கடலில் கலந்து வருகிறது.

வெள்ளப்பெருக்கு

கடந்த 7 நாட்களாக தொடர்ந்து வெள்ளப்பெருக்கின் காரணமாக ஆற்றின் நடுவே அமைந்துள்ள திட்டு கிராமங்களான நாதல்ப்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளை மணல், உள்ளிட்ட கிராமங்கள் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, தாழ்வான பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு முகாம்கள் மற்றும் கரையில் அமைக்கப்பட்ட தற்காலிக பந்தல்களிலும் தஞ்சம் அடைந்திருந்தனர். இவர்களுக்கு அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று முதல் தண்ணீரின் அளவு குறைய தொடங்கியது இன்று (செப்.,04) முழுவதுமாக தண்ணீரை குறைந்ததால் நிவாரண முகங்களிலிருந்து மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர். 6 நாட்களாக தண்ணீரில் மூழ்கி இருந்ததால் 30 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தது. சேதமடைந்த வீடுகளை பிரித்து அப்புறப்படுத்தும் பணியை தீவிரமாக நடைபெறுகிறது. கிராம சாலைகள் முற்றிலுமாக சேதம் அடைந்து துண்டிக்கபட்டுள்ளது.

பயிர்கள் சேதம் (Crops Damage)

கிராமங்களில் பிரதான சாகுபடியாக இருந்த மல்லிகை, முல்லை, செவ்வந்தி உள்ளிட்ட மலர் சாகுபடிகள் மற்றும் வெண்டை, கொத்தவரை, மிளகாய், கத்திரி, கீரை உள்ளிட்ட காய்கறி சாகுபடி கிழங்கு, சோளம், பருத்தி,வாழை சாகுபடி என ஒட்டு மொத்த விவசாய பயிர்கள் 340 ஏக்கர் பயிர்கள் முழுவதுமாக அழுகி சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க

மல்லிகைப்பூ விலை உயர்வு: மகிழ்ச்சியில் விவசாயிகள்!

மழை காரணமாக மீண்டும் தக்காளி விலை உயர்வு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)