News

Saturday, 22 May 2021 03:47 PM , by: Sarita Shekar

White fungus..

இரண்டாவது அலை காரணமாக கடந்த சில வாரங்களாகவே இந்தியா முழுவதும் வைரஸ் பரவுதல் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கொரோனா வைரஸிலிருந்து (Coronavirus) மீண்டு வரும் மக்களை பிளாக் ஃபுங்கஸ் என்ற புதிய தொற்று தாக்கியதாக செய்திகள் வந்துள்ளன. இந்த கருப்பு பூஞ்சை(Black Fungus) தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புதிய வைரஸ் தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது கருப்பு பூஞ்சை தொற்று நோயை விட அதிக ஆபத்தை உண்டாக்கும் வெள்ளை பூஞ்சை (White Fungus) தொற்றுநோய் பாதிக்கப்பட்ட நோயாளி கண்டறியப்பட்டுள்ளார். இந்த வெள்ளை பூஞ்சை பீகார், பாட்னாவில் நான்கு பேருக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

மியூக்கோர்மைகோசிஸ் என்னும் கருப்பு பூஞ்சையை விட வெள்ளை பூஞ்சை தொற்று மிகவும் ஆபத்தானது. இது நுரையீரல் மற்றும் உடலின் பிற பகுதிகளில் நகங்கள், தோல், வயிறு, சிறுநீரகம், மூளை, அந்தரங்க உறுப்புகள், வாய்ப்பகுதி போன்றவற்றை பாதிக்க செய்யும். மேலும் இந்த பாதிப்பு ஏற்பட்ட நோயாளிக்கு ஹெச்.ஆர். சி.டி செய்யும் போது அவர்களுக்கு கொரோனா தொற்று உறூதி செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

வெள்ளை பூஞ்சை நோய் யாரை தாக்கும்

நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டவர்களுக்கு வெள்ளை பூஞ்சை நோய் ஆபத்தானது. நீரிழிவு நோயாளிகள் மற்றும் நீண்ட காலத்துக்கு ஸ்டிராய்டு மாத்திரைகள் உட்கொள்பவர்களுக்கு வெள்ளை பூஞ்சை தொற்று பாதிக்கு எளிதாக உண்டாகலாம். கொரோனா பாதிக்கப்பட்டவருக்கு ஆக்ஸிஜன் தேவைப்படும் நிலையில் இவர்களுக்கு வெள்ளை பூஞ்சை பாதிப்பு உண்டாகிறது. இந்த வெள்ளை பூஞ்சை ஆனது நேரடியாக நுரையீரலை பாதிக்கும். மேலும் வெள்ளை பூஞ்சை குழந்தைகள் மற்றும் பெண்களையும் பாதிக்க செய்கிறது.

இந்த நோய்க்கான சிகிச்சை

இத்தொற்றுக்கு சிகிச்சையளிக்க நரம்பு வழியாக மருந்து செலுத்தப்படுகிறது. ஒரு டோஸின் விலை 3500 ரூபாய் வரை என்று கூறப்படுகிறது. இதை எட்டு வாரங்கள் வரை தினசரி பயன்படுத்த வேண்டும். வெள்ளை பூஞ்சை ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்தால் குணப்படுத்திவிடலாம்.

மேலும் படிக்க

கரும்பூஞ்சை நோய்க்கு தமிழகத்தில் முதல் உயிரிழப்பு!

கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு வரும் பூஞ்சை தொற்று! பாதிப்பிலிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)