தமிழகத்தில் 15,759 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 378 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்து 21 நாட்களாக தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது அறுதல் தருகிறது.
கொரோனா பாதிப்பு நிலவரம்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது, அதன்படி தமிழகத்தில் நேற்று 1, 82,586 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. இதில் 8,769 ஆண்கள், 6,990 பெண்கள் என மொத்தம் 15 ஆயிரத்து 759 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,24,597 ஆக அதிகரித்து உள்ளது, இதுவரை 2 கோடியே 88 லட்சத்து 63 ஆயிரத்து 236 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 29,243 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில் 21 லட்சத்து 20 ஆயிரத்து 889 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 1 லட்சத்து 74 ஆயிரத்து 802 பேர் உள்ளனர்.
378 பேர் கொரோனாவால் உயிரிழப்பு
அரசு மருத்துவமனையில் 240 பேரும், தனியார் மருத்துவமனையில் 138 பேரும் என மொத்தம் 378 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் இதுவரை 28 ஆயிரத்து 906 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு விவரம்
கோவையில் 2056 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. ஈரோட்டில் 1365 பேரும், ஈரோட்டில் 12520 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க...
தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கொரோனாவால் மரணம் இல்லை- எய்ம்ஸ் ஆய்வில் தகவல்!
தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு! - 27 மாவட்டங்களில் மதுக்கடைகளை திறக்க அனுமதி!!