திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் தற்போது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் புதிய முறையில் லட்டு தயாரிப்பது குறித்து தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதாவது இனி இயற்கை விவசாயம் மூலம் கிடைக்கும் பொருட்களை கொண்டு தான் லட்டு தயாரிக்கப்படும்.
திருப்பதி லட்டு
திருப்பதி ஏழுமலையான் திருத்தலத்தில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது. தினசரி பக்தர்களுக்கு வழங்குவதற்காக சுமார் 4 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒரு மாதத்தில் மட்டும் 1 கோடி லட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.
மேலும் பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு கூடுதலாகவும் லட்டுகள் தயாரிக்கப்பட்டு விற்பனையாகி வருகிறது.
இந்த நிலையில் நடைபெற்ற அறங்காவலர் குழு ஆலோசனை கூட்டத்தில் இந்த லட்டு பிரசாதத்தை இயற்கை விவசாயம் மூலம் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி தயாரிக்க தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
கோடையில் மின்தடை ஏற்படாது: அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு!
அட்சய திருதியை 2023: தங்கம் வாங்குவதற்கு ஏற்ற முகூர்த்த நேரம் இதோ!