வடகிழக்கு பருவமழையானது தமிழகம், புதுவை, காரைக்கால் மற்றும் தமிழகத்தை ஒட்டிய கேரளா, ஆந்திரா, தெற்கு உள் கர்நாடக பகுதிகளில் இருந்து இன்று விலகியது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
வறண்ட வாநிலை (Dry Weather)
வடகிழக்கு பருவமழையானது தமிழகம், புதுவை, காரைக்கால் மற்றும் தமிழகத்தை ஒட்டிய கேரளா, ஆந்திரா, தெற்கு உள் கர்நாடக பகுதிகளில் இருந்து இன்று விலகியது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
20, 21ம் தேதிகளில் இலங்கைக்கு கிழக்கே நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென் தமிழகக் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவக்கூடும்.
சென்னை (Chennai)
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48மணி நேரத்திற்கு வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் லேசான பனிமூட்டமும் காணப்படும்.
வெப்பநிலை (Temperature|)
அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸையும், குறைந்த பட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை (Warning for fishermen)
மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவுமில்லை
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
2024ம் ஆண்டு வரை போராடத் தயார் : விவசாய சங்கத்தினர் அறிவிப்பு!
குளிர்கால நோய்களில் இருந்துத் தப்பிக்க வேண்டுமா? இது மட்டும் போதும்!