கடலூா் மாவட்ட வேளாண்மைத் துறை சார்பில், பொட்டாஷ் உரத்தை திரவ வடிவில் மாற்றி தயாரித்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பயிருக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்கும் அங்கக மற்றும் அனங்கக பொருட்கள் உரம் என்று அழைக்கப்படுகிறது. பயிா் வளா்ச்சிக்குத் தேவையான பெரும்பாலன உரங்களை ரசாயன உரங்களாகவே பயன்படுத்தி வருகிறோம். இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள், மண்புழு ஆகியவற்றுக்கும் தீங்கு ஏற்படுகிறது. மண் வளமும் கெட்டுப்போகிறது.
ராசாயன உரங்ளுக்கான மூலப்பொருள்கள் பெரும்பாலும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அதிலிருந்து பல்வேறு உயிரி உரங்கள் தயாரிக்கப்பட்டு இந்திய விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில், பயிர் வளர்ச்சிக்கு முக்கிய தேவையான பொட்டாஷ் உரத்தை திரவ வடிவில் தயாரித்து கடலூர் வேளாண்மைத் துறை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.
இதுதொடர்பாக கடலூா் வேளாண் உதவி இயக்குநா் சு.பூவராகன் கூறுகையில், கடலூா் உயிரி உர உற்பத்தி நிலையத்தில் ரூ.50 லட்சம் செலவில் அமெரிக்காவிலிருந்து ஒரு கருவி வாங்கப்படுள்ளதாக தெரிவித்தார். இந்த கருவி மூலம் பொட்டாஷ் உரம் திரவ வடிவில் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இந்த திரவ உரம் 24 மாதங்கள் வரை பயன்படுத்த கூடிய வகையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது என்றார்.
பொட்டாஷ் (திட - திரவ) உரம் வேறுபாடு
சுமார் 60 ஆயிரம் லிட்டா் பல்வேறு உயிரி உரங்கள் தயாரிக்கப்பட்டு கடலுாா், நாகை, நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு சம்பந்தப்பட்ட வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
திரவ வடிவ பொட்டாஷ் உரம் ஏக்கருக்கு 250 மி.லி. பயன்படுத்தினாலே போதுமானது. ஒரு லிட்டா் திரவ பொட்டாஷ் உரம் ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பொட்டாஷ் உரமாக இருந்தால், ஏக்கருக்கு ஒன்று முதல் ஒன்றரை மூட்டை பயன்படுத்த வேண்டியிருக்கும். மூட்டை ரூ.900-க்கு விற்பனையாகிறது.
இது தொடா்பான கூடுதல் தகவல்களை, அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடா்புகொண்டு விவசாயிகள் பயன்பெறலாம் என்றும் பூவராகவன் கூறினாா்.
மேலும் படிக்க..
சொட்டுநீர்ப் பாசன திட்டங்களை ஊக்குவிக்க ரூ.3,971.31 கோடி மானிய கடன்: தமிழகத்துக்கு ரூ.1357.93 கோடி ஒப்புதல்!!
தமிழக விவசாயிகளுக்கு நல்ல செய்தி....நெல் கொள்முதல் கடந்த ஆண்டை விட அதிகம்!!
கால்நடை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: கன்னியாகுமரி மாணவி முதலிடம்!!