தற்கொலைகளை தடுக்கும் வகையில் தமிழ்நாடு சில பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை விதிப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் ஆண்டுதோறும் தோராயமாக ஒன்றரை லட்சம் பேர் பூச்சிக்கொல்லி மருந்துகளை உட் கொண்டு தற்கொலை செய்து கொள்கிறார்கள். சில பூச்சிக்கொல்லி மருந்துகள் மரம், பயிர்களில் உள்ள பூச்சிகளை அகற்ற பயன்படுத்தும் போது, அதில் இருக்கும் அதிக வீரியம் காரணமாக அதை கையாளும் விவசாயிகளையும் பாதித்து விடுகிறது.
பூச்சிக்கொல்லிக்கு தடை (Bannes Pesticides)
பல்வேறு நாடுகளில், இந்த பூச்சிக்கொல்லி மருந்து குறித்து கடும் கட்டுப்பாடுகளை விதித்தும், சில நாடுகளில் இவற்றை தடை செய்தும் உயிரிழப்பை குறைத்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட வேளாண் இயக்குனர் எஸ்.சின்னச்சாமி கூறுகையில், இயற்கை விவசாயத்தை விடுத்து சில விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையை தடுக்க அபாயகரமான 6 வகை பூச்சி கொல்லி மருந்துகளான கார்போபியூரான், மோனோகுரோட்டபாஸ், பிரபினோபாஸ், சைபர்மெத்ரின். குளோரோபைரிபாஸ் மற்றும் அசிபேட் போன்ற பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்கவும், பயன்படுத்தவும் இன்னும் 60 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை அறிவித்துள்ளது.
இதன்மூலம் விவசாயிகள் இயற்கை விவசாயத்தை அணுகவும், தற்கொலைகளை குறைக்கவும் அரசு தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க
தென்பெண்ணை ஆற்றில் இரசாயன நுரை: உடனே நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை!
கரும்பு விவசாயத்தில் கால்தடம் பதித்த போர் விமான தயாரிப்பு பொறியாளர்!