News

Wednesday, 07 April 2021 07:54 PM , by: KJ Staff

Credit : Daily Thandhi

கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில், பல நுணுக்கங்களை கற்றுத்தர வேளாண் துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில், நச்சலூர் பகுதியில் கரும்பு அறுவடை பரிசோதனை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி (Training) அளிக்கப்பட்டது.

கரும்பு அறுவடை பரிசோதனை

நச்சலூர், குளித்தலை வட்டாரம் நங்கவரம் குறு வட்டம் நங்கவரம் (வடக்கு-1) கிராமத்தில் குளித்தலை வட்டார வேளாண்மை துறையின் சார்பில், கரும்பு அறுவடை பரிசோதனை (Sugarcane Harvest test) குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடந்தது. இதற்கு திருச்சி மண்டல தேசிய மாதிரி ஆய்வு நிறுவன மூத்த புள்ளியியல் அலுவலர் சிவக்குமார் தலைமை தாங்கினார். துணை வேளாண்மை அலுவலர் கணேசன், உதவி வேளாண்மை அலுவலர் தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் உள்ள வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் கிராமப்புற வேளாண்மை அனுபவ பயிற்சியின் கீழ் பயிர் அறுவடை (Harvest) பரிசோதனையின் நுணுக்கங்களையும் முக்கியத்துவத்தையும் விவசாயிகளிடையே விளக்கமாக எடுத்து கூறினர். இதில் விவசாயிகள் சங்கரநாராயணன், பாலகிருஷ்ணன், கல்லூரி மாணவர்கள், வேளாண் தொழிலாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வேளாண் துறை வழங்கிய இப்பயிற்சி, கரும்பு விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. வேளாண் துறையும், வேளாண் துறை மாணவர்களும் பயிர்களின் மகசூலை அதிகரிக்க, பல பயிற்சிகளை விவசாயிகளுக்கு அளித்து வருகிறது. விவசாயிகளும் ஆர்வத்துடன் வேளாண் துறை நடத்தும் பயிற்சிகளில் கலந்து கொள்கின்றனர்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

நீலகிரியில் பாகற்காய் அறுவடை தொடங்கியது! விலை குறைவால் விவசாயிகள் கவலை!

கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைப் பாதுகாக்க காற்றோட்டமுள்ள கொட்டகை! ஆராய்ச்சி நிலையம் தகவல்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)