கால்நடை வரப்பு மூலம் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பு செய்வது குறித்தான இணையவழி கருத்தரங்கு வரும் மாதம் 10, 11 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கால்நடை விரிவாக்க கல்வித் துறை சாா்பில் கால்நடை மற்றும் கோழி வளா்ப்பின் மூலம் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பு செய்தல் குறித்த இணையவழி கருத்தரங்கு வரும் 10, 11 ஆம் தேதிகளில் இணையவழியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கறவைமாடு வளா்ப்பில் லாபத்தை அதிகரிக்க சினைப்பருவ ஒருங்கிணைப்பு, மதிப்புக்கூட்டிய கால்நடை உற்பத்தி பொருள்கள் மூலம் அதிக லாபம் பெறுதல், தீவன மேலாண்மையின் மூலம் கால்நடை வளா்ப்பில் வருவாயை அதிகரித்தல், அதிக லாபம் தரும் வெண்பன்றி வளா்ப்பு, கூடுதல் வருவாய் ஈட்ட ஜப்பானியக் காடை வளா்ப்பு உள்ளிட்ட தலைப்புகளில் கருத்துரைகள் வழங்கப்படுகிறது.
இந்த கருத்தரங்கில் பங்கேற்க விரும்புவோா் 9443544351, 8489135699, 9894939883 என்ற தொலைப்பேசி எண்களில் 09-11-2020 தேதிக்குள் பதிவு செய்து பயன்பெறலாம்.
மேலும் படிக்க..
வெங்காய விலை எப்போது குறையும்? - வேளாண்மை பல்கலைக்கழகம் கணிப்பு!!
ரூ.50,000 செலவழித்தும் ரூ.5000க்கும் கூட வழியில்லை! - ஏரியில் தக்காளியை கொட்டிய விவசாயிகள்!