குழல் இனிது, யாழ் இனிது என்பர், மழலை சொல் கேளாதோர் என்று ஒரு பழமொழி உண்டு. ஆக குழந்தை செல்வம் கிடைக்காதபோதுதான், அதன் அருமையை உணர முடியும். ஆனால் வறுமை உங்களை எந்த அளவுக்கும் இறங்கி யோசிக்க வைக்கும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி.
அண்மைகாலமாக இளையத் தலைமுறை ஜோடிகளுக்கு குழந்தைப்பேறு என்பது, சற்று சவாலான ஒன்றாக மாறி வருகிறது. பல ஆண்டுகள் காத்திருக்கும் நிலை சிலருக்கு ஏற்படும்போது, அவர்கள் அந்தக் குழந்தையை எப்படியாவது பெறுவது என்ற முடிவுக்கு வருகின்றனர்.
இதனால், வறுமையால் வாடும் சிலருக்கு, தங்கள் குழந்தைகளை விற்பது சரி என்றேத் தோன்றிவிடுகிறது. அப்படியொரு சம்பவம்தான் ஒடிசாவில் நிகழ்ந்திருக்கிறது.
பெண் சிசு விற்பனை
ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் வறுமையின் காரணமாக பிறந்த சில நாட்களே ஆன பெண் குழந்தையை ரூ.7000-க்கு விற்பனை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. குழந்தை விற்கப்பட்டது தொடர்பாக, தசரத்பூர் பிளாக்கின் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரி ஒருவர், சுரேஷ் தாஸ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் குழந்தை இல்லாத தம்பதிக்கு பிறந்த சில நாட்களே ஆன குழந்தையை ரூ.7000-க்கு விற்றதாக போலீசில் புகார் தெரிவித்தனர்.
கண்டுபிடிப்பு
இதையடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இந்நிலையில், போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தியதில் குழந்தை இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின்னர், போலீசார் சம்பேபால் கிராமத்தில் இருந்து விற்கப்பட்ட பெண் குழந்தையை மீட்டு குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் கூறுகையில், நாங்கள் மிகவும் ஏழ்மையானவர்கள். ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். எனவே பிறந்த குழந்தையை எங்கள் உறவினர் ஒருவருக்குக் கொடுக்க முடிவு செய்தோம். நாங்கள் குழந்தையை விற்கவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க...
சிகரெட் பிடிக்கும் காளி- வைரல் ஆகும் விபரீதம்!
வீடு வாங்கப் பணத்திற்கு பதிலாக தர்பூசணி- மகிழ்ச்சியில் விவசாயிகள்!