கோயம்பேடு சந்தையில், உணவு பாதுகாப்பு விதிகளை மீறி, செயற்கை முறையில் வாழைப் பழங்கள் (Bananas) பழுக்க வைக்கப்பட்டு வருவதாக, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
திடீர் சோதனை
உணவு பாதுகாப்புத் துறையின் மாவட்ட நியமன அலுவலர் சதீஷ் குமார் தலைமையிலான உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், கோயம்பேடு மார்க்கெட்டில் வாழைப் பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்யும், 45 கடைகள் மற்றும் கிடங்குகளில், நேற்று திடீர் சோதனை நடத்தினர்.இதில், பழங்களை செயற்கையாக பழுக்க வைப்பதற்காக 'எத்திலின்' என்ற ரசாயனத்தை நேரடியாக வாழைக்காய்கள் மீது தெளித்து பழுக்க வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
செயற்கை முறை
இதையடுத்து, செயற்கை (Artificial) முறையில் பழுக்க வைக்கப்பட்ட, 15 டன் வாழைப் பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றை கோயம்பேடு சந்தை வளாகத்தில் இயங்கும் காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் கிடங்கில் கொட்டி அழித்தனர். சம்பந்தப்பட்ட கடைகளுக்கு, உணவு பாதுகாப்புத் துறை சார்பில் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது.
மேலும் படிக்க