மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 24 April, 2024 7:03 PM IST
Bhanvad Devbhumi Dwarka SPNF

MFOI, VVIF கிசான் பாரத் யாத்ராவின் ஒருபகுதியாக ஜாம்நகரின் தேவபூமி துவாரகா விவசாயி FPO-வினை சேர்ந்த விவசாயிகளை நேரில் சந்தித்து கௌரவித்தது கிரிஷி ஜாக்ரன் குழு. FPO ஆர்கானிக் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் தொடர்பான விவசாயிகள் கலந்துரையாடலும் இந்த நிகழ்வில் இடம்பெற்றது.

கிரிஷி ஜாக்ரனின் முன்னெடுப்புகளில் ஒன்றான ”MFOI, VVIF கிசான் பாரத் யாத்ரா” குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் தனது பயணத்தை தொடங்கிய நிலையில் நேற்றைய தினம் (ஏப்ரல் 23) ஜாம்நகர் மாவட்டத்தின் பன்வாட் தாலுகாவில் உள்ள தேவபூமி துவாரகா விவசாயி FPO வினை அடைந்தது பாரத் யாத்ரா.

FPO சார்பில் சிறப்பான வரவேற்பு:

FPO தலைவர் மற்றும் முற்போக்கு விவசாயியான நவீன்பாய் மற்றும் இதர FPO உறுப்பினர்கள் MFOI, VVIF கிசான் பாரத் யாத்ரா வாகனத்தினை மகிழ்ச்சி பொங்க வரவேற்றனர். FPO தலைவர் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து உரையாற்றினார். FPO சார்பில் தயாரிக்கப்படும் ஆர்கானிக் பொருட்கள் குறித்தும், அவற்றின் விற்பனை தன்மைகளையும் விரிவாக எடுத்துரைத்தார். கிரிஷி ஜாக்ரன் குழுவினரும் MFOI விருது தொடர்பான விவரங்களை விவசாயிகளுக்கு தெரிவித்தனர்.

MFOI VVIF kisan bharat yatra:

MFOI 2023 விருது நிகழ்வின் ஒரு பகுதியாக, இந்தியா முழுவதும் பயணம் செய்து விவசாயிகளின் புகழை பரப்பும் நோக்கத்தோடு MFOI VVIF kisan bharat yatra- வாகனத்தை, மத்திய சாலைகள் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த நிதின் கட்காரி கொடியசைத்து தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாகனம் தொடர்ச்சியாக இந்தியாவின் பல மாநிலங்களில் தனது பயணத்தை தொடங்கியது. உத்தரப்பிரதேசம், மஹாராஷ்டிரா, குஜராத், டெல்லி, பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும், தமிழகத்தில் சில பகுதிகளிலும் இந்த யாத்ரா மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது வரை இந்த பயணத்தின் வாயிலாக 6000 கி.மீ தூரத்தை கடந்து, 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளை நேரிடையாக சந்தித்துள்ளது கிரிஷி ஜாக்ரான்.

MFOI 2024 நிகழ்வு:

2023- நிகழ்வின் வெற்றியினைத் தொடர்ந்து, Millionaire Farmer of India Awards 2024- நிகழ்வுக்கு விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டுக்கான நிகழ்வில் ஏறத்தாழ 100-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளதாகவும் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MFOI விருதுகள் 2024- நிகழ்வானது, டிசம்பர் 1 முதல் டிசம்பர் 5, 2024 வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நிகழ்வினைப் போன்றே இந்தியாவின் அனைத்து மூலைகளிலிருந்தும் விவசாயிகள், விஞ்ஞானிகள், தொழில் முறை வல்லுனர்கள் பலரும் கலந்துக் கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Read more:

மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா!

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை?

English Summary: Devbhumi Dwarka FPO Farmers welcome MFOI VVIF Kisan Bharat Yatra
Published on: 24 April 2024, 07:03 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now