முக்கனிகளில் ஒன்று தான் மாம்பழம்.மாமபழத்தின் சுவைக்கு உலகமே அடிமை.ஆனால் நீரிழிவு நோயாளிகளுக்கு அதில் பெரிய கண்டமும் இருக்கக்கூடும்,பாவம் அவர்களால் மாம்பழத்தை ருசிக்க முடிவதில்லை. மாம்பழத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால் மருத்துவர்களும் நோயாளிகளுக்கு தடை விதிக்கின்றன.
சர்க்கரை நோயாளிகளின் இந்த கவலையை போக்க பாகிஸ்தான் விவசாயிகள் நீரிழிவு நோயாளிகளுக்கு பயன் தரும் வகையில் "சுகர் ப்ரீ"மாம்பழத்தை விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றுள்ளனர்.
கராச்சியை சேர்ந்த குலாம் சர்வார் என்ற ஒருவர் தனது 300 ஏக்கரில் பிரமாண்டமான இயற்கை விவசாய நிலங்களை பராமரித்து வருகிறார்.
இந்த வயல்களில் அவர் 44 ரகத்தில் மாம்பழம் வகைகள் விளைவிக்கிறார்.இங்கு மாம்பழம் தொடர்பான பல ஆராய்ச்சிகளையும் அவர் செய்துள்ளார். குறிப்பாக ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் க்ளென் மற்றும் கெய்ட்,சிந்திரி,சவுன்சா மாம்பழங்களின் சர்க்கரை வீதத்தை குறைக்கும் ஆராய்ச்சியில் தீவிரமாக செயல்பட்டார்.மேலும் தீவிர விடாமுயற்சியின் பலனாக இவற்றில் சர்க்கரையின் அளவு பெருமளவில் குறைத்து வெற்றியும் பெற்றுள்ளார்.
பொதுவாகவே,மாம்பழங்களில் 12-25 சதவீதம் சர்க்கரை இருக்கும்.இந்த காரணத்தினால் சர்க்கரை நோயாளிகள் மாம்பழத்தை சாப்பிட தயங்குவார்கள். ஆனால் குலாம் சர்வார் அவர் தோட்டத்தில் விளைவிக்கும் மாம்பழங்களில் 4-6 சதவீதம் மட்டுமே சர்க்கரை இருக்கிறது, இவை அனைத்தும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மரங்கள் என்று தெரிவித்தார்.
சர்க்கரை வீதம் குறைவாக இருக்கும் மாம்பழங்களின் விலைகள், பாகிஸ்தான் சந்தைகளில் கிடைக்கும் ஒரு சாதாரண மாம்பழங்களுக்கு ஈடாக கிலோ ஒன்றுக்கு ரூ.150 என்ற விலையில் விற்கப்படுகிறது.
ஆகையால், இதுபோன்ற மாம்பழங்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்ததாக கருதப்படுகிறது.மேலும் மாம்பழம் பிரியர்கள் தயக்கமின்றி மாம்பழத்தின் ருசிஸை அனுபவிக்க முடியும்.
மேலும் படிக்க:
நடப்பு ஆண்டில் மாம்பழ உற்பத்தி 4 சதவீதம் உயரும்!
ஒரு பழத்தின் விலை ரூ.500 முதல் ரூ.1,000 வரை,மத்தியப் பிரதேசத்தின் 'நூர்ஜஹான்' மாம்பழங்கள்.
விவசாயிகளின் தயாரிப்புகளை எளிதாக சாதாரண மக்களிடம் அடையக்கூடிய ஒரு தளம்( FTB-ஆர்கானிக்)