பிரதமரின் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கான 7- வது தவணையாக ரூபாய் 18 ஆயிரம் கோடி ரூபாயை அண்மையில் பிரதமர் மோடி விடுவித்தார். நீங்கள் கிசான் பயனாளியாக இருந்தால் சில வழிமுறைகளை பின்பற்றி உங்கள் வங்கிக்கணக்கு நிலை குறித்து அறியலாம்
பி.என் கிசான் திட்டம்
விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இதில் முக்கிய திட்டமாக பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM Kisan Samman Nidhi Yojana ) அமைந்துள்ளது. இந்த திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. மூன்று தவணையாக தலா ரூ. 2000 அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது.
எற்கவே 6 தவணை வழங்கப்பட்ட நிலையில், கடந்த 25-ம் தேதி பிரதமர் மோடி பி.எம் கிசான் திட்டத்தின் 7-வது தவணையாக சுமார் 9 கோடி விவசாயிகளுக்கு ரூபாய் 18,000 கோடியை விடுவித்தார்.
உங்களுக்கு பணம் வந்ததா இல்லையா?
நீங்கள் பி.எம் கிசான் திட்டத்தின் பயனாளியாக இருந்தால், கிழே வழங்கப்பட்டுள்ள சில வழிமுறைகளை பின்பற்றி உங்களின் கணக்கு நிலை, பயனாளிகளின் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை அறியலாம்.
பி.எம் கிசான் நிலை அறிய என்ன செய்ய வேண்டும்?
-
உங்களின் கணக்கு நிலை குறித்து அறிய முதலில் www.pmkisan.gov.in அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லுங்கள்
-
முகப்புப்பக்கத்தில் "Farmers Corner" என்பதைக் கிளிக் செய்க.
-
உங்களின் கணக்கு நிலை குறித்து அறிய ''Beneficiary status" என்பதைக் கிளிக் செய்யுங்கள், அல்லது பயனாளிகளின் பட்டியல் குறித்து அறிய ''Beneficiary list" என்பதை கிளிக் செய்யுங்கள்.
-
பின் உங்களின் மாநிலம், மாவட்ட, ஆதார் எண், மொபைல் எண் உள்ளிட்ட அங்கே கேட்கப்படும் தகவல்களை நிறப்புங்கள்.
-
பிறகு "Get Report" என்பதை கிளிக் செய்க
-
இப்போது உங்களின் கணக்கு நிலவரங்களை பார்க்கமுடியும்.
பயனாளிகளின் பட்டியலை நேரடியாக பார்க்க
Click here
உங்களின் கணக்கு நிலை குறித்து நேரடியாக பார்க்க
Click here
விவசாயிகளுக்கு PM-Kisan நிதி எவ்வாறு கிடைக்கும்?
பி.எம் கிசான் நிதியானது விவசாயிகளின் கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்படுகிறது, பணம் வழங்குவது தொடர்பான தகவல்கள் விவசாயிகளின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு SMS மூலம் அனுப்பப்படும். எனவே விவசாயிகள் சரியான மொபைல் எண்ணை சமர்ப்பித்திருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.