News

Friday, 30 August 2019 12:48 PM

தற்போது நமது நாட்டில் பின்பற்றப்படும் வருமான வரி சட்டம் அரை நூற்றாண்டுகள் பழமையானது. இந்த சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரவும், வருமான வரி சட்ட பிரிவுகளை மேலும் எளிமையாக்கவும், வரி வசூலை அதிகரிக்கவும் மத்திய அரசு நிபுணர் குழு ஒன்றை அமைத்திருந்தது.

நேரடி வரி விதிப்பு முறைகள் குறித்து கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆய்வு செய்து வந்தது. இதற்காக பலதரப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி, இறுதியாக திட்ட வரைவு ஒன்றை மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமனிடம், ஆகஸ்ட், 19ல், சமர்ப்பித்தது. இந்த அறிக்கை குறித்து அதிகாரபூர்வ  தகவல்கள் வராத நிலையில், ஆய்வு குழு பரிந்துரைத்துள்ள முக்கிய அம்சங்கள் பற்றிய செய்திகள் வெளியாகி உள்ளன.

நடைமுறையில் இருக்கும் வரி விகிதம்

தற்போதுள்ள முறையில்  5% , 20 %, 30%  என 3 அடுக்கு வரி முறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும்   ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சம் வரை உள்ளவர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வரி விவரங்கள் பின்வருமாறு

  • 2.5 லட்சம் ரூபாய் வரை – விலக்கு
  • 2.5 லட்சம் - 5 லட்சம் ரூபாய் வரை – 5%
  • 5 லட்சம் - 10 லட்சம் ரூபாய் வரை – 20% மற்றும் கூடுதல் வரி
  • 10 லட்சம் ரூபாய்க்கு மேல் – 30% மற்றும் கூடுதல் வரி

நிபுணர்களின் பரிந்துரை

திட்ட வரைவில் 3 அடுக்கிற்கு பதிலாக  5 அடுக்கு வரி முறையை கொண்டு வர பரிந்துரைத்துள்ளது. இவ்வாறு மாற்றி அமைப்பதன் மூலம் தற்போதைய பொருளாதார நெருக்கடியினை எளிதாக கையாள இயலும். மேலும்  தனிநபருக்கு வருமான வரி கட்டுவது என்பது சுமையாக இருக்காது.  5 அடுக்கு வரி விவரம்

  • 2.5 லட்சம் ரூபாய் வரை - விலக்கு
  • 2.5 லட்சம் - 10 லட்சம் ரூபாய் வரை - 10%
  • 10 லட்சம் - 20 லட்சம் ரூபாய் வரை - 20%
  • 20 லட்சம் - 2 கோடி ரூபாய் வரை - 30%
  • 2 கோடி ரூபாய்க்கு மேல் - 35%

நிபுணர்கள் கூறுகையில், வரியை குறைப்பதின் மூலம்,  வரி செலுத்துவோரின் வாங்கும் திறனை அதிகரிக்க இயலும். அரசுக்கு ஜி.எஸ்.டி. வருவாயும் பெருகும்,  உற்பத்தியும் பெருகும். வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்பதால் இந்த புதிய முறை அரசுக்கு உதவிகரமாக இருக்கும் என்கிறார்கள். தற்போது இந்த பரிந்துரை  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பரிசீலனையில் உள்ளது. அவர் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசனை செய்து இது விரைவில் இது குறித்து செய்திகள் வெளிவரும் எனறு  எதிர்பார்க்கப்படுகிறது.

Anitha Jegadeesan
Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)