மதுரை மாவட்டத்தில் 18,940 மாற்றுத்திறனாளிகள் 'ஸ்மார்ட்' அடையாள அட்டை (Smart Id Card) பெற்றுள்ள நிலையில் இன்னும் பத்தாயிரம் பேர் பெறாமல் உள்ளனர். மாற்றுத் திறனாளிகள் சலுகைகள் பெற சிறிய புத்தகம் போன்ற தேசிய அடையாள அட்டை இருக்க வேண்டும். இந்த அட்டையை பெற்றோருக்கு தற்போது 'ஸ்மார்ட்' கார்டுகள் வழங்கப்படுகின்றன.
ஸ்மார்ட் கார்டு (Smart card)
விண்ணப்பித்தோருக்கு மதுரை நகரில் திங்கள், வியாழன் நாட்களிலும், உசிலம்பட்டி மருத்துவமனையில் 2, 3வது திங்களன்றும் மருத்துவ பரிசோதனைக்குபின் தேசிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதை பெற்றவர்கள் அடுத்த கட்டமாக ஸ்மார்ட் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதனை தேசிய அடையாள அட்டையின் அனைத்து பக்கங்களின் பிரதிகள், ஆதார் கார்டு நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, கையெழுத்து மற்றும் கைரேகை பதிவுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
மாவட்டத்தில் 46 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களில் பலர் தேசிய அடையாள அட்டை பெற்றுள்ளனர். இவர்களுக்கு 'ஸ்மார்ட்' கார்டு வழங்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இருப்பினும் 28,308 பேர் விண்ணப்பித்து 18,940 பேர்தான் ஸ்மார்ட் கார்டு பெற்றுள்ளனர்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன் கூறுகையில், இந்த அட்டையை பெற்றவர்களே அரசின் நலத்திட்ட உதவிகளை பெறமுடியும். இந்த அட்டையில் பயனாளியின் எல்லா விவரங்களும் இடம் பெற்றிருக்கும். இதற்கான விண்ணப்பத்தை மாவட்ட அலுவலகத்தில் பெறலாம் என்றார்.
மேலும் படிக்க