கர்நாடக மாநில எல்லை பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் தேக்கி வைக்கப்பட்ட ரசாயன கழிவுகள் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றிருப்பதால் ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணைக்கு அதிக அளவில் நுரையுடன் வரும் நீரால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு, கர்நாடக மாநிலம் தென்பெண்ணை ஆறு வழியாக நீர் வரத்து உள்ளது, தமிழகத்தின் கெலவரப்பள்ளி அணையை தொட்டு கிருஷ்ணகிரி அணைக்கு சென்று பல்வேறு மாவட்டங்களை அடைகிறது தென்பெண்ணை ஆற்று நீர்.
ரசாயனம் கலந்த நுரையால் விவசாயிகள் அதிர்ச்சி
இந்நிலையியல், கர்நாடக நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் நீர் அதிகரித்து கெலவரப்பள்ளி அணைக்கு வினாடிக்கு 834 கனஅடிநீர் வந்துக்கொண்டு இருக்கிறது. வினாடிக்கு 808 கன அடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டது. அதில், இடது புற வாய்க்காலில், ரசாயனம் கலந்த நுரை தேங்கியதால் கடும் துர்நாற்றம் வீசியது. இதை பார்த்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரமாக உள்ள கர்நாடக மாநில தொழிற்சாலைகள், அங்கு தேக்கி வைக்கப்பட்டுள்ள இரசாயன கழிவுகளை அதிகப்படியான நீரில் ஆண்டுதோறும் கலந்துவிடுவதை தொழிற்சாலை நிர்வாகத்தினர் வழக்கமாக கொண்டுள்ளனர்.
விவசாயிகள் கவலை
கெலவரப்பள்ளி அணையிலிருந்து முதல்போக பாசனத்திற்கு செல்லக்கூடிய இடது புற கால்வாயில் நீர் துர்நாற்றத்துடன் அதிகப்படியான நுரை கோபுரங்களை போல காட்சியளிப்பதால் இவற்றின் மூலம் விவசாயம், மற்றும் கால்நடை உள்ளிட்டவைகளுக்கு ஏதேனும் பாதிப்பு உள்ளதா என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்கமளிக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பிடிக்க...
பெருந்தொற்று காலத்திலும் அதிக நிலப்பரப்பில் விளைச்சல் - வேளாண் துறை
தமிழ்நாடு அஞ்சல் துறையில் 3162 காலிப் பணியிடங்கள்! தகுதி 10ம் வகுப்பு மட்டுமே