தரமான தனியா (Coriander) உற்பத்தியையும், ஏற்றுமதியையும் அதிகரிக்க ‘தனியா உலகம்’ என்ற பெயரிலான இணையக் கருத்தரங்கை, இந்திய வாசனைப்பொருட்கள் வாரியம் (Perfume Board of India), உயிரி தொழில்நுட்ப துறை (டிபிடி) - தெற்கு ஆசிய உயிரி தொழில்நுட்ப மையம்(எஸ்ஏபிசி), உயிரி தொழில்நுட்ப விவசாய மையம், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஏஆர்) - மசாலாப் பொருட்கள் தேசிய ஆராய்ச்சி மையம் (என்ஆர்சிஎஸ்எஸ்), ராஜஸ்தான் வேளாண் சந்தை வாரியம்(ஆர்எஸ்ஏஎம்பி), கோட்டா வேளாண் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து அண்மையில் நடத்தின. இதில் பல மாநிலங்களைச் சேர்ந்த இத்துறை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
தனியா உற்பத்தி:
ராஜஸ்தானின் தென்கிழக்கு பகுதியான ஹதோதி, மத்தியப் பிரதேசத்தின் குணா மாவட்டம் ஆகியவை தனியா உற்பத்திக்கு (Coriander production) பெயர் போனவை. இவை நாட்டின் தனியா ஏற்றுமதியில் முக்கிய பங்களிப்பை அளிக்கின்றன. இந்திய வாசனைப்பொருட்கள் வாரியத்தின் தலைவர் திரு டி சத்தியன் (Sathiyan) பேசுகையில், தனியா வகைகள், பவுடர், இதர பதப்படுத்தப்பட்ட தயாரிப்புகள், வாசனை எண்ணெய் ஆகியவற்றின் ஏற்றுமதியில் உள்ள வாய்ப்புகளை தொழில்முனைவோரும் (Entrepreneur), ஏற்றுமதியாளர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
ஒரே மாவட்டம், ஒரே பொருள்
வாசனைப்பொருட்கள் வாரிய உறுப்பினர் திருமதி அனு ஸ்ரீ பேசுகையில், ‘ராஜஸ்தானை வாசனைப்பொருட்கள் உற்பத்தி, ஏற்றுமதி மையமாக மாற்ற அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என கூறினார். கோட்டா மாவட்டத்தில் உள்ள ராம்கன்ஞ் ஏபிஎம்சி மண்டிதான், ஆசியாவிலேயே (Asia) மிகப் பெரிய தனியா மண்டி. ராம்கன்ஞ் நகர் `தனியா நகரம்’ எனவும் அழைக்கப்படுகிறது. சமீபத்தில், `ஒரே மாவட்டம், ஒரே பொருள்’ பட்டியலில், கோட்டா மாவட்டத்துக்கு தனியாவை மத்திய அரசின் உணவு பதப்படுத்துதல் துறை (Food processing department) ஒதுக்கீடு செய்தது குறிப்பிடத்தக்கது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
காரைக்காலில் தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டம்! வேளாண்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்!
தென்னை ஆராய்ச்சி பணியைத் துவங்க வேண்டுமென விவசாயிகள் அரசிடம் கோரிக்கை!