MFOI, VVIF கிசான் பாரத் யாத்ராவின் ஒருபகுதியாக குஜராத்தின் ஹல்வாட் கிராமத்திலுள்ள விவசாயிகளை நேரில் சந்தித்து கௌரவித்தது கிரிஷி ஜாக்ரன் குழு. மேலும், இந்த சந்திப்பின் போது நடப்பாண்டு நடைப்பெற உள்ள MFOI 2024 நிகழ்வு குறித்தும், அவற்றில் இடம்பெற்றுள்ள விருதுகளுக்கான பிரிவுகள் குறித்தும் விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
கிரிஷி ஜாக்ரனின் முன்னெடுப்புகளில் ஒன்றான ”MFOI, VVIF கிசான் பாரத் யாத்ரா” குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் தனது பயணத்தை தொடங்கிய நிலையில் இன்றைய தினம் (ஏப்ரல் 26) மோர்பி மாவட்டத்திலுள்ள ஹல்வாட் என்ற கிராமத்தை சென்றடைந்தது பாரத் யாத்ரா. முற்போக்கு விவசாயி சினுபாய் படேலுடன் ஏராளமான விவசாயிகள் யாத்ரா வாகனத்திற்கு பெரும் வரவேற்பு அளித்தனர்.
முற்போக்கு விவசாயியுடன் கலந்துரையாடல்:
முற்போக்கு விவசாயியான சினுபாய் படேல், கிரிஷி ஜாக்ரன் நிருபருடன் உரையாடும் போது, ”நான் முற்போக்கான விவசாயியாக மாறுவதற்கு இயற்கை விவசாயமே காரணம். ஒவ்வொரு விவசாயியும் இயற்கை விவசாயத்தை முழுமையாக பின்பற்ற வேண்டும். அதனால் அவர்களும் என்னைப் போல் முற்போக்கான விவசாயிகளாக மாறலாம்”. இதற்கிடையில், மண்புழு உரம் தயாரிப்பது எப்படி என்று நேரிடையாக விளக்கமளித்தார்.
மேலும் கூறுகையில், “குஜராத்தின் மோர்பி மாவட்டம் நாட்டிலேயே மாதுளை உற்பத்தியின் மிகப்பெரிய மையமாக உள்ளது. 2023 ஆம் ஆண்டின் தரவுகளின்படி, மோர்பியின் ஹல்வாட் தாலுகாவில் 27 லட்சம் மாதுளை மரங்கள் நடப்பட்டன” என்கிற தகவலையும் நம்முடம் பகிர்ந்துக் கொண்டார். மே 29ஆம் தேதி வரை குஜராத்தின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று அங்குள்ள முற்போக்கு விவசாயிகளை அங்கீகரிக்க காத்திருக்கிறது MFOI, VVIF கிசான் பாரத் யாத்ரா.
MFOI VVIF kisan bharat yatra:
MFOI 2023 விருது நிகழ்வின் ஒரு பகுதியாக, இந்தியா முழுவதும் பயணம் செய்து விவசாயிகளின் புகழை பரப்பும் நோக்கத்தோடு MFOI VVIF kisan bharat yatra- வாகனத்தை, மத்திய சாலைகள் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த நிதின் கட்காரி கொடியசைத்து தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வாகனம் தொடர்ச்சியாக இந்தியாவின் பல மாநிலங்களில் தனது பயணத்தை தொடங்கியது. உத்தரப்பிரதேசம், மஹாராஷ்டிரா, குஜராத், டெல்லி, பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும், தமிழகத்தில் சில பகுதிகளிலும் இந்த யாத்ரா மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது வரை இந்த பயணத்தின் வாயிலாக 6000 கி.மீ தூரத்தை கடந்து, 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளை நேரிடையாக சந்தித்துள்ளது கிரிஷி ஜாக்ரான்.
MFOI 2024 நிகழ்வு: MFOI விருதுகள் 2024- நிகழ்வானது, டிசம்பர் 1 முதல் டிசம்பர் 3, 2024 வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நிகழ்வினைப் போன்றே இந்தியாவின் அனைத்து மூலைகளிலிருந்தும் விவசாயிகள், விஞ்ஞானிகள், தொழில் முறை வல்லுனர்கள் பலரும் கலந்துக் கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Read more:
கோடை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தில் முன்னுரிமை!
TNAU: நெல் வயலில் உரமிடும்- களையெடுக்கும் இயந்திர வடிவமைப்புக்கான தேசிய காப்புரிமை!