தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் விரைவில் ஆட்சி கலைப்பு வரும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் விரைவில் ஆட்சி கலைப்பு வரும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி குமரி மாவட்டம் பத்துகாணி அருகே உள்ள காளிமலை உச்சியில் காளிமலை துர்கா தேவி கோவில் அமைந்துள்ளது. தரைமட்டத்தில் இருந்து சுமார் 3500 அடிக்கு மேல் அமைந்து இருக்கும் இந்த கோயிலில் வருடா வருடம் சித்திரா பெளர்ணமி அன்று லட்சக்கணக்கான பெண்கள் 3 கிலோ மீட்டர் தூரம் மலையேறி பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய் பரவல் காரணமாக பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி கோவில் நிர்வாகிகளுடன் சாதாரணமாக நடைபெற்றது. இந்த நிலையில் கொரோனா கட்டுபாடுகள் தற்போது நீக்கப்பட்டுள்ளதை அடுத்து பக்தர்களுடன் வருடாந்திர சித்ரா பெளர்ணமியையொட்டி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துக்கொண்டு சிறப்பித்தார்.
பின்னர் நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள், இரத்த தான கொடையாளர்கள், இயற்கை விவசாய்கள், பழங்குடியின மக்களுக்கு இலவச கல்வி அளிக்கும் ஆசிரியர், இலவச மருத்துவம் அளிக்கும் மருத்துவர் சிறந்த ஆன்மீக யூட்டூப்பர் ஆகியோருக்கு விருதுகள் வழங்கி கெளரவித்தார். அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், யாரோ வந்து அமைச்சராகவோ, சட்டமன்ற உறுப்பினராகவோ இருக்க ஆண்டவர் விரும்பவில்லை, கட்சி தொண்டர்களுக்காகவும், தலைவர்களுக்காகவும் நம்மை தயார்படுத்தி கொண்டு இருக்கிறோம்.
ஆன்மா சுத்தப்படுத்தபட்டு அந்த பாதையில் பயணித்து கொண்டு இருக்கிறோம். நாம் தயார் நிலையில் இருக்கும்போது ஆண்டவன் கட்டளையிடுவான். அப்போது மிக விரைவில் அசுரர்கள் களையெடுப்பு நடக்கும் அந்த நேரத்தில் கேரளாவில் கம்யூனிஸ்டு ஆட்சி அகற்றப்படும், தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி அகற்றப்படும். நம் ஆட்சி அமையும் என்று தெரிவித்தார். அவரது கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் பழங்குடியின மக்களிடம் அவர்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களோடு கலந்துரையாடினார். அண்ணாமலை திமுகவுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளதால் கட்சி தலைமை கடும் கோபமடைந்ததாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க
வேலூரில் புதிய நெல் கொள்முதல் நிலையம் திறப்பு!
பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை! கால்நடை பராமரிப்புத் துறை