1.பட்டுக்கூடு விலை கிலோவுக்கு ரூ.200 குறைவு!
தமிழகத்தில் கோடை மழை பட்டின் தரம் மற்றும் விலையை பாதிக்கும் என பட்டு வளர்ப்பு விவசாயிகள் அஞ்சுகின்றனர். 521.25 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட தர்மபுரி மாநிலத்தில் பட்டுக்கூடு உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. மேலும் ஆண்டுக்கு சுமார் 854 டன் பட்டுக்கூடுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
எதிர்பாராத கோடை மழையால் பட்டுக்கூடுகளின் தரம் பாதிக்கப்படும் என பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகள் அஞ்சுகின்றனர். கடந்த இரண்டு மாதங்களாகச் சந்தையில் 150 ரூபாய் வரை விலை குறைந்துள்ளதாகப் புகார் தெரிவிக்கின்றனர்.
2.இனி ரேஷன் கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் விநியோகம் செய்ய அரசு திட்டம்
கோவை, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் ரேஷன் கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் விநியோகம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
3.பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா வேலைசெய்யவில்லை என விவசாயிகள் புகார்
பிரதமர் நரேந்திர மோடி 2016 ஆம் ஆண்டில் பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY-PM Fasal Bima Yojana) ஐ அறிமுகப்படுத்தியபோது, கணிக்க முடியாத பருவமழை, வறட்சி மற்றும் பிற தடுக்க முடியாத அபாயங்களை எதிர்கொள்ளும் விவசாயிகளுக்கு இது ஒரு நிரந்தர தோழனாக செயல்படும் என வர்ணிக்கப்பட்டது.
ஆனால் தற்போது ஒரு மில்லியனுக்கும் அதிகமான விவசாயிகளால் பயன்படுத்தப்படும் பயிர் காப்பீட்டு செயலியில் கடந்த சில தினங்களாக பாதிக்கப்பட்ட பயிர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய இயலவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
4.28 ஆம்தெதி தொடங்குகிறது மெகா சிறுதானிய மேளா
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் மூலம் வடக்கு மண்டல வேளாண்மை அறிவியல் நிலையங்களின் சார்பில் வரும் 28 மற்றும் 29 மே 2023 இரு நாட்கள் தருமபுரி வேளாண்மை அறிவியல் நிலையம், பாப்பாரப்பட்டியில் மெகா சிறுதானிய மேளா நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் கருத்துரைகள், கண்காட்சி மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டு பொருட்கள் சம்பந்தமான செயல் விளக்கங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் ஈரோடு வேளாண்மை அறிவியல் நிலையங்களின் சார்பில் தினசரி 4000-5000 விவசாயிகள் கலந்து கொள்ள உள்ளனர். நமது திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பாக 10 ஸ்டால்கள் புக் செய்யப்பட்டுள்ளது. விருப்பமுள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சிறுதானிய தொழில் முனைவோர், தனியார் நிறுவனங்கள் 8220004286 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
5.இன்றைய தங்கம் விலை
இன்று சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு 144 அதிகரித்து 45,680 க்கும் ,ஒரு கிராம் தங்கம் ரூ.5710 க்கும் விற்பனையாகிறது.
மேலும் படிக்க
பிள்ளையார் சுழி போட்டது Cyclone Mocha- மீனவர்கள் கரைக்கு திரும்ப உத்தரவு
பால் உற்பத்தி விவசாயிகளுக்கு காப்பீட்டு பிரிமீயத்தில் 50 சதவீத மானியம்!