திருவள்ளூர் மாவட்டம், தொட்டிக்கலை கிராமத்தில், விவசாயிகளுடன் இணைந்து, மிளகாய் நாற்றினை கலெக்டர் நட்டார். திருவள்ளூர் அடுத்த, தொட்டிக்கலை கிராமத்தில், மிளகாய் குழித்தட்டு நாற்று நடவு பணியினை, கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் நேற்று நேரில் பார்வையிட்டார்.
சிவப்பு மிளகாய் சாகுபடி (Red Chilli Cultivation)
விவசாயிகளுடன், இணைந்து, மிளகாய் நாற்றினை நடவு செய்த பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில், ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின்கீழ், இயற்கை முறையில், 450 ஏக்கர் பரப்பில், சிவப்பு மிளகாய் சாகுபடி செய்யும் திட்டம் துவக்கப்பட்டு உள்ளது. பச்சை மிளகாயை விட, சிவப்பு மிளகாய்க்கு அதிகளவில் விலை கிடைக்கும். இதனால் விவசாயிகளுக்கு அதிக வருமானம் கிடைக்கும். விவசாயிகளுக்கு தேவையான, மிளகாய் ரகம், அரசு தோட்டக்கலை பண்ணையில் விளைவித்து வழங்கப்படும்.
நிகழ்ச்சியில், தோட்டக்கலை துணை இயக்குனர் ஜெபகுமாரி அனி உட்பட துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
விவசாயிகளுடன் சேர்ந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் நாற்று நட்டதன் மூலம், விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு பயனுள்ள பல்வேறு நலத்திட்டங்களை வேளாண் துறை மூலமாக நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
மேலும் படிக்க