நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் பெருவாரியான மக்கள் கோழிகளை வளர்த்து அதன் மூலம் ஓரளவு வருமானம் ஈட்டி தங்களது குடும்ப செலவினங்கலை மேற்கொண்டு வருகின்றனர். புறக்கடையில் இத்தகைய கோழிகள் இரண்டு லட்சத்து எழுபத்தெட்டாயிரம் எண்ணிக்கையில் பொதுமக்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு வளர்க்கப்படும் கோழிகளுக்கு பல்வேறு வகையான நோய் தொற்றுகள் ஏற்படுவது இயல்பு. இதில் கோழிக் கழிச்சல் (வெள்ளக் கழிச்சல் / இராணிகேட்) நோய்ப்பாதிப்பால் கோழிகள் இறப்பு ஏற்பட்டு கிராம மக்களின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்படும். கோழிக்கழிச்சல் நோய் அனைத்து வயது கோழிகளையும் தாக்கும் தன்மையுடையது.
கோழிக் கழிச்சல் நோயின் அறிகுறிகளான கோழிகள் உடல் நலம் குன்றியும் சுறுசுறுப்பின்றியும் உறங்கியபடி இருக்கும். தீவனம், தண்ணீர் எடுக்காமலும் இருக்கும். எச்சம் வெள்ளைநிறத்தில் அதிக துர்நாற்றத்துடன் இருக்கும். கோழிகளின் இறகுகள் சிலிர்த்து தலைப்பகுதி உடலுடன் சேர்ந்தே இருக்கும்.
கோழிக் கழிச்சல் நோய் கோழிகளைத் தாக்கும் நோய்களிலேயே மிகவும் கொடுமையானது. இந்நோய் எற்படுவதை முன்கூட்டியே பொருட்டு ஆண்டுதோறும் இரு வாரகோழிக் கழிச்சல் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க: தமிழகத்தில் தொடர் மழை நீடிக்கும், வானிலை ஆய்வு மையம் தகவல்!
எனவே, ஆண்டுதோறும் கால்நடை பராமரிப்புத் துறை மூலமாக பிப்ரவரி மாதத்தில் இருவார கோழிக் கழிச்சல் தடுப்பூசி முகாம் நகர, கிராம மற்றும் குக்கிராமங்களில் நடத்தப்பெற்று, அவ்விடங்களிலுள்ள கோழிகளுக்கு தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேபோல் இவ்வாண்டு 2.78 லட்சம் கோழிகளுக்குத் தடுப்பூசிப் பணிமேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 01.02.2023 முதல் 14.02.2023 முடிய இருவார காலங்களுக்குத் தடுப்பூசிப் பணி மேற்கொள்ளப்படவிருக்கிறது. அதே சமயம் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தத்தமது பகுதிகளில் உள்ள கால்நடை மருந்தகங்களை அணுகி முகாம் நடைபெறும் இடங்களுக்கு 8 வாரம் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய கோழிகளை கொண்டு சென்று கோழிக்கழிச்சல் தடுப்பூசி போட்டு பயனடையுமாறு திருவள்ளுர் மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: