தீபாவளிக்கு ரூ.200 கோடிக்கு ஆவின் பொருள்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சா.மு. நாசர் தெரிவித்துள்ளார்.
தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் அம்பத்தூர் பால் பண்ணையில் ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்தாண்டு ஆவின் விற்பனை இலக்கு ரூ.200 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும், கடந்தாண்டு போல் இந்த ஆண்டும் கூட்டுறவு அரசு நிறுவனங்கள், போக்குவரத்து துறை அரசுத்துறை அலுவலர்கள், அரசு ஊழியர்கள் ஆவின் நிறுவனத்தில் இனிப்புகளை வாங்க வேண்டும் என்ற உத்தரவின் கீழ், ஆவின் பொருட்களின் விற்பனை தொடர்ந்து நடைபெறுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.
தொடர்ந்து, இம்முறை ஆவினில் 9 பொருள்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன என்றார். கடந்த முறை தீபாவளிக்கு 8 பொருள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன என்பது நினைவு கூரத்தக்கது.
இம்முறை ஆவினில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 9 பொருள்கள் வருமாறு:
கடந்த ஆண்டு ஆவின் பொருட்களின் விற்பனை ரூ.82.24 கோடியாக இருந்தது என்பது நினைவு கூரத்தக்கது.
மேலும் படிக்க: