ஒவ்வொரு ஆண்டும் இறுதி மாதங்களில் பண்டிகை கால சிறப்பு விற்பனை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் அமேசான், ஃபிளிப்கார்ட் ஷாவ்மி உள்ளிட்ட தளங்களில் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இதே போல், ஒன்பிளஸ் தரப்பிலும் பிரத்யேகமாக தீபாவளி தள்ளுபடி விற்பனை நடந்து வருகிறது.
கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்கிய இந்த சிறப்பு விற்பனை, செப்டம்பர் 30 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. ஒன்பிளஸ் 32 இன்ச் டிவிகளுக்கு நல்ல விலைகுறைப்பு செய்யப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் டிவி 32 | 40 | 43 Y1 டிவிகளின் விலை வெறும் 9,499 ரூபாயிலிருந்து தொடங்குகிறது.
ஒன்பிளஸ் டிவி வாங்க வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு, இது ஒரு நல்ல வாய்ப்பாகும். ஆண்ட்ராய்டு 9.0, ஆக்ஸிஜன் ப்ளே, ஒன்பிளஸ் கனெக்ட் ஆகிய அம்சங்கள் உள்ளன. இது பெசல் இல்லா டிவியாகும். USB 2, ஈத்தர்நெட், HDMI 2, RF, ஆப்டிக்கல் பாயிண்ட், ஆடியோ வீடியோ போர்ட் ஆகியவை உள்ளன.
வாரண்டி:
வாரண்டியைப் பொறுத்தவரையில் வெறும் 1 வருட வாரண்டி தான் வழங்கப்படுகிறது. கூடுதல் கட்டணம் செலுத்தி, கூடுதலாக 1 வருட வாரண்டியைப் பெற்றுக்கொள்ளலாம்.
குறைபாடுகள்:
இவ்வளவு அம்சங்கள் நிறைந்தாலும், யூடியூப்பில் தொழில்நுட்ப மதிப்பாய்வாளர்கள் ஒன்பிளஸ் டிவியில் சில குறைபாடுகள் இருப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக டிவியை தொடர்ந்து 1 மணி நேரத்திற்கு மேலாக பார்க்கும் போது, திடீரென திரை கருப்பாகி விடுவதாகவும், ஒரு தட்டு தட்டிய பிறகு தான் ஆன் ஆகுவதாகவும் கூறுகின்றனர்.
மேலும் படிக்க: