News

Saturday, 25 September 2021 02:41 PM , by: T. Vigneshwaran

இனி 50 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் திமுக ஆட்சியே தொடரும்

திமுக அரசு ஆட்சிக்கு வந்து 5 மாதங்கள் கூட நிறைவடையவில்லை. அதற்குள் சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். தினமும் புதிய திட்டங்களை அறிவிப்பதால் உலக அளவில் அவர் பாராட்டுகளை பெற்றுள்ளார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் 16 அடி பாய்ந்தால் அவருடைய மகன் 32 அடி பாய்வது போல் செயல்பட்டு வருகிறார் என்று உதயநிதியை அமைச்சர் காந்தி புகழ்ந்து பேசினார்.

ராணிப்பேட்டை மாவட்ட திமுக கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று வாலாஜா ஒன்றியத்தில் திமுக சார்பில்  மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்ட நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும், கைத்தறி துணிநூல் துறை அமைச்சருமான காந்தி கலந்துகொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

திமுக அரசு ஆட்சி அமைத்து 5 மாதங்கள் கூட நிறைவடையவில்லை. கடந்த காலத்தில் எதிர்க்கட்சியாக இருந்தபோதே நடந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக 60 சதவீத வாக்குகளை பெற்றது. தற்போது திமுக பிடித்துள்ளது. இந்த உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீத வெற்றியைப் பெற வேண்டும் என்று மேலும் கூறினார்.

இனி 50 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் திமுக ஆட்சி மட்டும்தான் தொடரும். வேறு ஆட்சி தமிழகத்தில் அமைய வாய்ப்பில்லை. தாய் 16 அடி பாய்ந்தால் குட்டி 32 அடி பாயும் என்று சொல்லுவார்கள் அதே போல் ஸ்டாலின் 16 அடி பாய்ந்தால் அவரது மகன் 32 அடி பாய்வது போல் செயல்பட்டு வருகிறார் என்று அமைச்சர் காந்தி கூறியுள்ளார்.

மேலும் படிக்க:

மக்களை தேடி மருதுவம் 'நகர்ப்புறங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது'

தமிழகம்: முழு வீச்சில் டெங்கு பாதிப்பு! அரசு நடவடிக்கை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)