பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு டோக்கன் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது இலங்கை அரசு. இதனால் மக்கள் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், தற்போது கடும் பெட்ரோல் தட்டுப்பாடு நிலவுகிறது.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நீடித்து வருகிறது. இதுமட்டுமல்லாமல் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இது ஒரு புறம் இருக்க, முன் எப்போதும் இல்லா வகையில், அங்கு பெட்ரோல், டீசல் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
ராணுவ பாதுகாப்பு
இந்நிலையில், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக இனி பெட்ரோல், டீசல் வாங்க விரும்புவோருக்கு முன்கூட்டியே டோக்கன் வழங்கப்படும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இதற்காக காவல்துறையினரும், ராணுவ வீரர்களும் பயன்படுத்தப்படுவார்கள்.
டோக்கன் கட்டாயம்
பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் மொபைல் நம்பரை பதிவு செய்துவைத்துக்கொள்ள வேண்டும். பெட்ரோல், டீசல் வாங்குவதற்காக பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்படும். இதன் அடிப்படையில் வாகன ஓட்டிகள் பெட்ரோல், டீசல் போட்டுக்கொள்ளலாம்.
இலங்கையில் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த வாரமும், அடுத்த வாரமும் இலங்கைக்கு பெட்ரோல், டீசல் வராது. அடுத்து எப்போது இலங்கைக்கு பெட்ரோல், டீசல் கொண்டுவரப்படும் என்பதே தெரியவில்லை என அந்நாட்டின் எரிசக்தி துறை அமைச்சர் காஞ்சனா விஜேசேகரா தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் இறக்குமதி குறித்து ர்ஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இலங்கையின் அமைச்சர்கள் ரஷ்யாவுக்கு செல்கின்றனர். பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு, விலை உயர்வு, போக்குவரத்து சிக்கல் என இலங்கை மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மேலும் படிக்க...
நல்லெண்ணெய் விலை கிடு கிடு ஏற்றம் - ஒரே வாரத்தில் ரூ.166 உயர்வு!