தரமற்ற மருந்துகள் சந்தையில் விற்கப்படுவதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது. நடத்தப்பட்ட ஆய்வில் 26 வகையான தரமற்ற மருந்துகள் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளது.
பொதுவாக நம் நாட்டில் விற்பனை மற்றும் உற்பத்தி செய்யப்படும் மருந்து மற்றும் மாத்திரைகள் அனைத்தும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒப்புதல் அவசியமாகும். முறையான ஆய்வுகள் நடத்தப்பட்டு அதற்கான உரிமம் வழங்க படுகிறது.
கடந்த ஜூன் மாதத்தில் 843 வகையான மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 817 மருந்துகள் தரமானவை என்றும், 26 வகையான போலி மருந்துகள் புழக்கத்தில் இருப்பதாக கண்டுபிடிக்க பட்டுள்ளது.
விரைவில் நிவர்த்தி செய்ய கூடிய வயிற்றுப்போக்கு, இருமல், கிருமித் தொற்று, வயிற்றுப் புண் போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படும் 26 வகையான மருந்துகள் போலியானதும் என்றும், தரமற்றவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
பெரும்பாலான போலி மருந்து தொழிற்சாலைக்கள் உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அமைந்துள்ளன. தரமற்ற போலி மருந்துகளை தயாரித்து விற்பனை செய்த நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொது மக்கள் பயன் பெறும் வகையில் போலி மற்றும் தடை செய்யப்பட்ட மருந்துகளின் முழு விபரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் https://cdsco.gov.in/opencms/opencms/en/consumer/List-Of-Banned-Drugs/ என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
Anitha Jegadeesan
Krishi Jagran