இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 26 July, 2022 11:53 AM IST

நாட்டின் முதல் குடிமகன் என்ற குடியரசு தலைவர் பதவி. இந்த பதவி தேசத்தின் மிக உயரிய பதவி. இதனை வகிக்கும் நபர்கள், நாட்டின் முதல் குடிமகனமாகத் திகழ்வதுடன், பணியில் இருந்து ஓய்வு பெற்றபிறகும், பென்சன், ஆடம்பர பங்களா, பணியாளர்கள் சேவை, மருத்துவ சலுகை, விமான பயணம் என பல்வேறு சலுகைகளையும் அனுபவிக்கத் தகுதிபெறுகின்றனர்.

அந்த வகையில் இந்தியாவின் 15ஆவது குடியரசு தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்றுள்ளார். இந்தியாவின் முதல் பழங்குடியின குடியரசு தலைவர் என்ற பெருமையை திரௌபதி முர்மு பெற்றுள்ளார்.

சம்பளம்

திரௌபதி முர்முவுக்கு மாதம் 5 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும். குடியரசுத் தலைவருக்கான சம்பளம் 2016ஆம் ஆண்டில் 200% உயர்த்தப்பட்டது. இதன் அடிப்படையில் இந்த சம்பளம் வழங்கப்படுகிறது.

பிற சலுகைகள்

இவருக்கு இலவச தங்குமிடம், மருத்துவ சேவை வழங்கப்படும். அலுவலக செலவுகளுக்காக ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும். ரயில் பயணங்கள் முற்றிலும் இலவசம். உலகம் முழுவதும் எங்கு வேண்டுமானாலும் விமானத்தில் இலவசமாக பயணிக்கலாம்.

ஒரு உதவியாளர், ஒரு செயலாளர், இரண்டு பணியாட்கள் ஆகிய பணியாளர் உதவியும் உண்டு. டெல்லியில் உள்ள ராஷ்ட்ரபதி பவனில்தான் தங்க வேண்டும். இதன் தரை பரப்பளவு 2 லட்சம் சதுர அடி. மொத்தம் 340 அறைகள் உள்ளன. இதுபோக ஷிம்லாவில் மஷோப்ரா, ஹைதராபாத்தில் பொலாரம் ஆகிய இடங்களிலும் குடியரசு தலைவருக்கான இல்லங்கள் உள்ளன. இங்கு அவர் விடுமுறைக் காலத்தில் செல்லலாம்.

குண்டு துளைக்காத கார்

குடியரசு தலைவருக்குப் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்600 கார் போக்குவரத்துக்கு வழங்கப்படும். இந்த காருக்கு நம்பர் பிளேட் இருக்காது. இந்த கார் துப்பாக்கி குண்டுகளையும், அதிர்வுகளையும் தாங்கும் திறன் கொண்டது. குண்டுவெடிப்பு, இதர வெடிமருந்துகள், எரிவாயு தாக்குதல் ஆகியவற்றையும் இந்த கார் சமாளிக்கும்.

ஓய்விற்கு பிறகு

பதவி ஓய்வுபெற்ற பின் அவருக்கு மாதம் 2.5 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும். எந்த வாடகையும் இல்லாத பெரிய பங்களாவும் தங்குவதற்கு வழங்கப்படும். இதுபோக இரண்டு லேண்ட்லைன், ஒரு மொபைல் போன், ஐந்து பணியாளர்கள், ஊழியர்களுக்கான செலவுகளுக்கு ஆண்டுக்கு 60,000 ரூபாய் ஆகியவை கிடைக்கும். இதுபோக ரயில், விமானப் பயணங்கள் முற்றிலும் இலவசம்.

மேலும் படிக்க...

ரூ.2 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை- TNPSC அறிவிப்பு!

இதய ஆரோக்கியத்திற்கு தினமும் 3 அல்லது 4 முந்திரி!

English Summary: Do you know how much the president's salary is? 5 lakhs per month!
Published on: 25 July 2022, 08:49 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now