இந்தியாவில் எண்ணற்ற ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளன. ஒவ்வொரு நிலையங்களும் ஒவ்வொரு துறையில் சிறப்பித்து விளங்குகின்றன. துறை சார்த்த தகவல்களை நேரடியாகவோ, தொலைபேசி வாயிலாகவோ, இணையதளம் மூலமாகவோ பெற்று கொள்ளலாம். இதோ உங்களுக்காக சிறிய தொகுப்பு
- இந்திய விவசாய ஆராய்ச்சி மையம் (ICAR) - புதுடெல்லி
- மத்திய அரிசி ஆராய்ச்சி நிலையம் - கட்டக்
- மத்திய கரும்பு ஆராய்ச்சி நிலையம் - கோயம்புத்தூர்
- மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிலையம் - சிம்லா
- மத்திய புகையிலை ஆராய்ச்சி நிலையம் - ராஜமுந்திரி
- மத்திய காடுகள் ஆராய்ச்சி நிலையம் - டேராடூன்
- தேசிய சர்க்கரை ஆராய்ச்சி நிலையம் - கான்பூர்
- இந்திய அரக்கு ஆராய்ச்சி நிலையம் - ராஞ்சி
- தேசிய பால் ஆராய்ச்சி நிலையம் - கர்னல்
- மத்திய எரிபொருள் ஆராய்ச்சி நிலையம் – தன்பாத்
- மத்திய தோல் ஆராய்ச்சி நிலையம் - சென்னை
- மத்திய சுரங்க ஆராய்ச்சி நிலையம் - தன்பாத்
- மத்திய மருந்து ஆராய்ச்சி நிலையம் - லக்னோ
- இந்திய வானிலை ஆய்வு மையம் - புனே & டெல்லி
- ராமன் ஆராய்ச்சி நிலையம் – பெங்களூர்
- தேசிய உலோகவியல் ஆய்வகம் - ஜாம்ஷெட்பூர்
- மத்திய கட்டிட ஆராய்ச்சி நிலையம் - ரூர்கி
- மத்திய சாலை ஆராய்ச்சி நிலையம் - புதுடெல்லி
- இந்திய பெட்ரோலிய நிலையம் - டேராடூன்
- தேசிய புவி-இயற்பியல் ஆராய்ச்சி நிலையம் - ஹைதராபாத்
- டாடா அடிப்படை ஆராய்ச்சி நிலையம் - மும்பை
- இந்திய தொல்லியல் ஆய்வு மையம் - கொல்கத்தா
- மத்திய சணல் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம் - கொல்கத்தா
- மத்திய தேங்காய் ஆராய்ச்சி நிலையம் - காசர்கோடு
- தேசிய கடலியல் நிலையம் - பனாஜி
- தேசிய கைத்தறி ஆராய்ச்சி நிலையம் – அகமதாபாத்
- மத்திய உப்பு மற்றும் கடல் வேதியியல் ஆராய்ச்சி நிலையம் - பாவ்நகர்
- தேசிய வானூர்தி ஆய்வகம் - பெங்களூர்
- மத்திய அறிவியல் உபகரணங்கள் நிலையம் - சண்டிகர்
- மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிலையம் (CECRI) - காரைக்குடி