ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களுக்கு மீன்களின் வரத்து அதிகமாக இருந்தது. குறிப்பாக சீலா மீனின் வரத்தும் அதிகமாக வந்துள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாண்டஸ் புயலுக்கு பிறகு பாம்பன் பகுதியில் 90க்கும் மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். புயல் காரணமாக கடல் நீரோட்டத்தினால் மீன்களின் வரத்து அதிகளவே இருந்துள்ளது, இதில் பாம்பன் பகுதி மீனவர்களின் ஃபேவரைட் மீனான சீலா மீன் வரத்து ஒரு படகிற்கு ஐந்து டன் வரையிலும் வந்துள்ளதாக தெரிவித்தனர்.
சீலா மீனின் சிறப்புகள்
இந்த சீலா மீனில் 100-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளதாம். கரைச் சீலா, ஓலைச் சீலா, குழிச் சீலா, கட்டையஞ் சீலா, லோப்புச் சீலா, போன்ற வகைகளும் இவற்றில் அதிக சுவை உடையது நெய் மீன் என்றழைக்க கூடிய நெய் சீலா மீன் ஆகும்.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு உடலைப்பை கொண்டுள்ளது. உடலமைப்பு வைத்து சீலா மீன் வகையை கண்டறிகின்றனர்.
இந்த சீலா மீன் அதிகளவு நீளமாக 6.9 அடி நீளமும், 30 செ.மீ அகலமும் வளரக்கூடியது. அதிகளவு எடையாக இரண்டு கிலோ வரையிலும் வளரக்கூடியது. பாம்பன் பகுதியில் மாவுலாமீன் என்று அழைக்கப்படுகிறது. பெரிய வகை மீன்கள் இவற்றை வேட்டையாட வந்தால் பவளப்பாறைகளுக்குள் ஒழிந்து கொள்ளும்.
கரிபியக் கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடலில் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் அதிகளவில் காட்டப்படுகிறது. உப்பு நீரிலும், நல்ல தண்ணீரிலும் வளரும் தன்மை உடையது.
சீலா மீனின் மருத்துவ குணம்
இந்த சீலா மீன் உண்பதால் ஒமேகா- 3 மற்றும் வைட்டமின் B2 சத்து கிடைக்கின்றது. கண்களை நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது. மீன் வகைகளிலே இந்த மீனில் கொழுப்பு சத்து குறைந்தே காணப்படுகிறது. குடல் புண்கள் சரிசெய்யும், பெண்கள் மாதவிடாய் காலத்தில் எடுத்துக்கொண்டால் நல்லது என்று மீனவர்கள் கூறிகின்றனர்.
மேலும் படிக்க: