News

Tuesday, 28 July 2020 02:30 AM , by: Daisy Rose Mary

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம் மற்றும் உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும்.

12 மாவட்டங்களில் கன மழை (12 Dist expects heavy rainfall)

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர், திருச்சி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மற்ற மாவட்டங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும்.

நீலகிரி, கோவை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும். தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இலேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

மீனவர்களுக்கு எச்சரிக்கை (Warning for fisherman)

  • இன்று தெற்கு வங்கக்கடல் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசும்

  • இன்று மற்றும் நாளையும் தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்

  • வரும் 30ம் தேதி தென் மேற்கு வங்கக்கடலில் சூறாவளி காற்று மணிக்கு 40- 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசும்

  • வரும் ஜூலை 30 மற்றும் 31ம் தேதிகளில் மத்திய மேற்கு அரபிக்கடலில் பலத்த காற்று மணிக்கு 40- 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசும்

  • இன்று முதல் வரும் ஆகஸ்ட் 1 வரை தென் மேற்கு அரபிக்கடலில் பலத்த காற்று 40 - 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்

இதனால் மீனவர்கள் யாரும் இப்பகுதிக்கு செல்லவேண்டாம் என்று வானிலை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

சென்னை நிலவரம் (Weather in Chennai)

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில பகுதிகளில் இலேசான முதல் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

கடந்தை ஆண்டை விட அதிக பரப்பளவில் குறுவை சாகுபடி - மத்திய அரசு தகவல்!!

நோய்களை தீர்க்கும் வேப்பிலையின் மருத்துவ பயன்கள்!

தேனி வளர்ப்பு, காளான் வளர்ப்பு, மலர் தோட்டம் உள்ளிட்ட பல சிறு தொழில்கள் குறித்து படிக்க..

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)