இந்தியா மற்றும் தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் படிப்படியாக கட்டுப்பாடுகளை அதிகரித்து வருகின்றனர். தமிழகத்தைப் பொறுத்த வரையில், மழலையர் பள்ளிகள் அதாவது (Nursery class)செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. 8 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. மக்கள் கூடும் இடங்களான திரையரங்குள், சலூன் மற்றும் உணவகங்கள் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதும் குறிப்பிடதக்கது.
மேலும் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் வழிபாட்டு தளங்களும் மூன்று நாட்கள் முட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து,
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பரமணியன் தமிழகத்தில் 3வது அலை கொரோனா தொடங்கிவிட்டதாக அறிவித்தார். அதேநேரத்தில், இதுவரை ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 நாட்களில் நெகடிவ் ரிசல்ட் வந்துவிடுவதாகவும், இருந்தாலும் அவர்கள் 5 நாட்கள் தங்கவைக்கப்பட்டு மறு டெஸ்டில் நெகடிவ் வந்தால் மட்டுமே வீட்டிற்கு அனுப்பப்படுவதாகவும், அவர் விளக்கினார். இதுவரை கிடைத்த முடிவுகளில் ஒமிக்ரானால் பெரும்பாலானோர் 5 நாட்களில் குணமடைந்துவிடுவதாக அறிவித்தார்.
அதன் அடிப்படையில் 5 நாட்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டார். திங்கட்கிழமை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில் கொரோனா வைரஸால் 1,728 பேர் பாதிக்கபட்டிருப்பதாக தெரிவிக்கின்றன. ஒமிக்ரான் வைரஸூக்கு 21 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிவிப்பு வெளியாகி வருகிறது.
மேலும் படிக்க:
PM Kisan:10வது தவணை பெறவில்லையா? இந்த எண்களை அழைக்கவும்
விவசாயிகளுக்கு எச்சரிக்கை! குளிர்காலத்தில் வாழையில் இதை கவனிக்கவும்