நிலவிலிருந்து பூமிக்கு கொண்டு வரப்பட்ட மண்ணில் செடி, கொடிகள் வளரும் என்பதை புளோரிடா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆக்சிஜன் இல்லாத சந்திர மண்டலத்தின் நிலப்பகுதியில் தாவரங்கள் வளருமா என்பது குறித்து அமெரிக்காவின் புளோரிடா பல்கலை விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.
இதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான 'நாசா' நிலவில் இருந்து பூமிக்கு எடுத்து வந்த மண்ணை சிறிய குடுவைகளில் வைத்து அதில் விதைகளை ஊன்றி ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
நிலவில் செடி (plant in the moon)
நிலவிலிருந்து எடுக்கப்பட்ட மண்ணில் ஊன்றப்பட்ட விதைகள் தற்போது முளை விட துவங்கியுள்ளன. எனினும் பூமியில் உள்ள செடிகள் போல் இல்லாமல் நிலவு மண்ணில் முளைத்த செடிகள் வளர்ச்சி குன்றி காணப்படுவதாக புளோரிடா விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 'இந்த சோதனையால் நிலவில் செடி கொடிகள் வளர முடியும் என்பது தெரிய வந்துள்ளது' என அவர்கள் கூறினர்.
சந்திரனுக்கு மனிதர்கள் தொடர்ந்து அனுப்பப்பட்டு வரும் நிலையில் 'இதுபோன்ற ஆய்வுகள் நிலவில் ஆக்சிஜனை உற்பத்தி செய்வதற்கான ஆராய்ச்சிக்கு வலு சேர்க்கும்' என விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க