News

Thursday, 14 July 2022 02:37 PM , by: R. Balakrishnan

Jallikattu

தைத்திருநாள் மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது வழக்கம். இதில், நாட்டு மாடுகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், அத்தீர்ப்புக்கு தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.

நாட்டு மாடுகள் (Cows)

ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், கடந்த ஆண்டு செப்டம்பரில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'ஜல்லிக்கட்டு விளையாட்டில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தார்.

ஜல்லிக்கட்டு (Jallikattu)

மனுவை விசாரித்த நீதிபதிகள், 'ஜல்லிக்கட்டில் கலப்பின மாடுகள் மற்றும் வெளிநாட்டு மாடுகளை அனுமதிக்கக் கூடாது; கால்நடை டாக்டர்கள் சான்றளித்த நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும்' என உத்தரவிட்டனர். உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள், ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து விசாரணையை ஒத்தி வைத்தனர்.

மேலும் படிக்க

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்வு: மகிழ்ச்சியில் விவசாயிகள்!

10 மாதக் குழந்தைக்கு ரயில்வே வேலை: வரலாற்றில் இதுவே முதன்முறை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)