கொரோனாத் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத அரசு ஊழியர்கள் பணிக்கு வர வேண்டாம் என்று, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உலுக்கிய வைரஸ் (Shaken virus)
உலக நாடுகளை உலுக்கி எடுத்துவரும் கொரோனா என்ற அரக்கன், இந்தியா, சீனா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டுடிருக்கிறது.
கொடூரக் கொரோனா (Cruel corona)
உலகில் இதுவரை 22 கோடிக்கும் மேற்பட்டோரை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. கடந்த ஆண்டுத் தாக்கிய முதல் அலையைக் காட்டிலும் 2-வ அலை மிகவும் மோசமாக உள்ளது. லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.
உருமாறியக் கொடூரம் (Metamorphosis)
இந்த வைரஸ் குறிப்பாக பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து வருகிறது. எனினும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட்டதால், உலக நாடுகள் நிம்மதி அடைந்துள்ளன.
இதை அடுத்து கொரோனா தடுப்பூசி போடும் பணியில் சர்வதேச நாடுகள் முனைப்பு காட்டி வருகின்றன. தடுப்பூசி குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு முயற்சிகளையும் அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
ஆனால் அரசின் முயற்சியை அலட்சியப்படும் மக்களுக்கு பலவிதக் கெடுபிடிகளையும் உலக நாடுகள் கொடுத்து வருகின்றன.
ஜிம்பாப்வே அதிரடி (Zimbabwe Action)
இதன் ஒருபகுதியாக ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத அரசு ஊழியர்கள் பணிக்கு வர வேண்டாம் என்று, அந்நாட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது.
பணிக்கு வர வேண்டாம் (Do not come to work)
இது குறித்து தகவல் தொடர்புத் துறை அமைச்சர் மோனிகா முட்ஸ்வாங்வா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கொரோனாத் தடுப்பூசி போட்டுக் கொள்ள அரசு ஊழியர்களுக்குப் போதிய நேரம் வழங்கப்பட்டு விட்டது. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டவர்களில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில், பெரும்பாலானவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை. எனவே, மக்களின் நலன்கருதி அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க...
இன்று மெகா தடுப்பூசி முகாம்; தமிழகத்தில் 20 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த திட்டம்!
வருமான வரி தாக்கல் செய்வதில் தொடரும் சிக்கல்: காலக்கெடு நீட்டிப்பு!