News

Sunday, 08 January 2023 06:30 AM , by: R. Balakrishnan

Pongal Gift Token

2023 ஆம் ஆண்டு வர உள்ள பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவற்றுடன், 1,000 ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பொங்கல் பரிசு (Pongal Gift)

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னையில் வரும் 9 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான டோக்கன் வினியோம் பணியும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த முறை போல் இந்த முறை எந்த குளறுபடியும் நடக்கக் கூடாது என்பதில் தமிழக அரசு மிகத் தீவிரமாக உள்ளது. இதற்காக பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்திற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே பொறுப்பு என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

டோக்கன் (Token)

இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்கள் வீடு தேடி வரும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ரேஷன் கடைகளில் டோக்கன்களை நேரடியாக சென்று பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. டோக்கன் கிடைக்காத குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கார்டை காண்பித்து நியாய விலை கடைகளுக்கு சென்று பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க

ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு: டோக்கன் விநியோகம் தீவிரம்!

ஆதார் கார்டில் அப்டேட் செய்ய அருமையான வாய்ப்பு: தமிழகத்தில் ‘ஆதார் 3.0′ சிறப்பு முகாம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)